Gadar 2: இப்படியெல்லாம் இங்க நடக்குமா பாஸ்.. கடார் 2 சக்சஸ் பார்ட்டியில் மூன்று கான்கள்!
மும்பை: சன்னி தியோல், அமீஷா பட்டேல் நடிப்பில் வெளியான கடார் 2 திரைப்படம் பாலிவுட்டில் 500 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூலுடன் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. பல வருடங்கள் கழித்து சன்னி தியோலுக்கும் அமீஷா பட்டேலுக்கும் இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பரிசாக தந்துள்ள நிலையில், சமீபத்தில் சக்சஸ் பார்ட்டியை பாலிவுட் பிரபலங்கள் சூழ படக்குழுவினர் நடத்தினர்.
சன்னி தியோல் நடத்திய வெற்றி விழா நிகழ்ச்சியில் பாலிவுட்டின் முன்னணி கான் நடிகர்களான ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அமீர்கான் என மூன்று கான்களும் கலந்து கொண்டது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் எல்லாம் இப்படி ஒற்றுமையாக இன்னொரு நடிகரின் வெற்றி விழாவில் பங்கேற்பார்களா என்கிற கேள்வியை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.
ஜெயிலருக்கு போட்டியாக: ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான நிலையில், அந்த படத்துக்கு பாலிவுட்டில் போட்டியாக அக்ஷய் குமாரின் ஓஎம்ஜி 2 மற்றும் கடார் 2 உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

கடார் 2 ஆகஸ்ட் 11ம் தேதி வெளியான நிலையில், இதுவரை 500 கோடி வசூல் வேட்டை நடத்தி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டை பெற்றுள்ளது. இத்தனைக்கும் அந்த படம் வெறும் 60 கோடி ரூபாயில் தான் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்கருக்கு கடார் 2: இந்தியா சார்பில் அடுத்த ஆண்டு ஆஸ்கர் திரைப்பட விருது விழாவுக்கு கடார் 2 அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்தளவுக்கு கடார் 2 திரைப்படம் ரசிகர்களை கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் அனில் ஷர்மா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் சன்னி தியோல் மற்றும் அமீஷா பட்டேல் பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடித்து ரசிகர்களுக்கு பழைய நினைவுகளை மீண்டும் திருப்பிக் கொண்டு வந்து கொடுத்திருந்தனர்.

மூன்று கான்கள்: இந்த ஆண்டு ஷாருக்கானின் பதான் திரைப்படம் 1000 கோடி வசூலை செய்த நிலையில், கடார் 2 திரைப்படம் இந்தி பெல்ட்டிலேயே மிகப்பெரிய வசூல் வேட்டையை அள்ளி ஒட்டுமொத்தமாக 500 கோடி வசூல் செய்த நிலையில், தியோல் குடும்பம் பாலிவுட் திரையுலகத்தை ஒட்டுமொத்தமாக அழைத்து மிகப்பெரிய பார்ட்டி நடத்தி உள்ளனர்.
இந்த பார்ட்டியில் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான், அமீர்கான் மற்றும் சல்மான் கான் மூவரும் கலந்து கொண்டு சன்னி தியோலை கட்டிப்பிடித்து எடுத்துக் கொண்ட போட்டோக்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளன.

மொத்த பாலிவுட்டும்: மேலும், அபிஷேக் பச்சன், அஜய் தேவ்கன், கஜோல், கியாரா அத்வானி, கார்த்திக் ஆர்யான் என ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்களும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
தமிழில் நடக்க வாய்ப்பில்லை: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 600 கோடி வசூல் அள்ளிய நிலையில், இப்படியொரு சக்சஸ் பார்ட்டி இங்கே நடக்க வாய்ப்பே இல்லை என்பது தான் கசப்பான உண்மை.
ரஜினிகாந்துக்காக கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம் எல்லாம் ஒன்று சேர்ந்து வருவார்களா என்றும் இப்படியொரு நிகழ்ச்சியை ரஜினி தரப்பு நடத்துமா என்பதுமே கேள்விக்குறி தான் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











