பிரபாஸ் அனுஷ்காவை தவிர வேறு யாரை மணந்தாலும் 3 பேரின் வாழ்க்கை நாசம்: நண்பர்

By Siva

Recommended Video

சாகோ படத்தின் ரகசியத்தை சொன்ன பிரபாஸ் I Saaho Press Meet

ஹைதராபாத்: பிரபாஸுக்கு அனுஷ்காவை தவிர வேறு யாருடனாவது திருமணம் நடந்தால் 3 பேரின் வாழ்க்கை நாசமாகும் என்று அவர்களின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நான் அனுஷ்காவை காதலிக்கவில்லை, அவர் என் குடும்ப நண்பர் மட்டுமே என்று பிரபாஸ் மீண்டும், மீண்டும் கூறி வருகிறார். ஆனால் அவர் பேச்சை நம்ப யாரும் தயாராக இல்லை.

இந்நிலையில் பிரபாஸ், அனுஷ்காவின் நண்பர் ஒருவர் குண்டை தூக்கிப் போட்டுள்ளார். அவர் பிரபாஸின் திருமணம் குறித்து தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது,

பிரபாஸ்

பிரபாஸ்

பிரபாஸ் தன் குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்ய மாட்டார். அவருக்கு குடும்பத்தார் தான் உலகம். மற்றவர்கள் எல்லாம் அதன் பிறகே. அனுஷ்கா வேறு சாதி, வேறு தெலுங்கு பேசும் சமூகம், வேறு மாநிலத்தை சேர்ந்தவர். பிரபாஸ் குடும்பத்தார் சாதி விட்டு சாதி திருமணம் செய்ய அனுமதிக்க மாட்டார்கள்.

அனுஷ்கா

அனுஷ்கா

பிரபாஸுக்கும், அனுஷ்காவும் இடையே நெருக்கம் ஏற்பட்டது குறித்து அறிந்த உடனே அவரின் குடும்பத்தார் நடிகையின் சாதியை பற்றி தெரிந்து கொள்ள விரும்பினார்கள். குடும்பத்தை மீறி உன்னை திருமணம் செய்ய முடியாது என்று பிரபாஸ் அனுஷ்காவிடம் தெரிவித்துவிட்டார். ஆனால் இருவருக்கும் இடையேயான காதல் வலுவானதாக உள்ளது. அதனால் அவர்களால் காதலை முறித்துக் கொள்ள முடியவில்லை.

 நாசம்

நாசம்

பிரபாஸ் அனுஷ்காவை தவிர வேறு யாரையாவது திருமணம் செய்தால் 3 பேரின் வாழ்க்கை நாசமாகும். பிரபாஸுக்கு இரண்டு வழி தான் உள்ளது. ஒன்று குடும்பத்தாரை சமாதானம் செய்வது. இல்லை குடும்பத்தாரை எதிர்த்துக் கொண்டு அனுஷ்காவை திருமணம் செய்வது. அதுவும் இல்லை என்றால் யாரையும் திருமணம் செய்யாமல் இருப்பது. பிரபாஸ் திருமணம் செய்யாமலேயே அனுஷ்காவுடன் வாழலாம் என்று அவர்களின் நண்பர் தெரிவித்துள்ளார்.

சாஹோ

சாஹோ

பிரபாஸ், பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள சாஹோ படம் வரும் 30ம் தேதி வெளியாக உள்ளது. அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் பிரபாஸ் பிசியாக உள்ளார். சாஹோ ரிலீஸான பிறகு பிரபாஸின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் நண்பர் ஒருவர் குண்டை தூக்கிப் போட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X