ஜீவா படத்திற்கு பாட்டெழுதிய கவிஞர் வைரமுத்து குடும்பம்
ஒரே படத்தில் அப்பா வைரமுத்து, மகன்கள் மதன் கார்க்கி,கபிலனுடன் இணைந்து பாட்டெழுதியுள்ளனர். விஷ்ணு நடித்துள்ள ஜீவா படத்தில்தான் இந்த கவிஞர் குடும்பம் இணைந்துள்ளது.
சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஜீவா'. இது கிரிக்கெட் விளையாட்டைப் பற்றிய திரைப்படம். விஷ்ணு, ஸ்ரீதிவ்யா நடித்துள்ள இப்படத்தை விஷாலும், அவருடைய நெருங்கிய நண்பருமான ஆர்யாவும் இணைந்து வெளியிடுகின்றனர்

கவிஞர் வைரமுத்து குடும்பம்
ஜீவா படத்தின் பாடல்களை கவியரசு வைரமுத்துவின் குடும்பத்தில் உள்ள மூன்று பேர் எழுதியுள்ளனர் என்ற தகவல் இப்போது வெளியாகியுள்ளது. முதல்முறையாக கவிப்பேரரசு வைரமுத்து அவருடைய இரண்டு மகன்களான மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து ஆகிய மூன்று பாடலாசிரியர்களும் இந்த படத்திற்கு பாடல்கள் எழுதியுள்ளனர்.

டி.இமான் இசையில்
டி.இமான் இசையமைப்பிலும், ஆர்.மதி ஒளிப்பதிவிலும் உருவாகியுள்ள ஜீவா திரைப்படத்தை அந்தோனி எடிட்டிங் செய்துள்ளார். இந்த படத்தில் 'இவன் வேற மாதிரி' நாயகி சுரபி இரண்டாவது கதநாயகியாக நடிக்கின்றார்.

மதன் கார்க்கி
ஜீவா படத்தில் மற்றொரு சிறப்பம்சம் இந்தப் படத்திற்கு வைரமுத்துவின் குடும்பமே பாடல்கள் எழுதியுள்ளது. இந்த தகவலை வைரமுத்துவின் மகன் மதன்கார்க்கி தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அப்பாவுடன் இணைந்து
இது ஒரு அற்புதமான நிகழ்வு என்றும் மதன் கார்க்கி குறிப்பிட்டுள்ளார். நானும் தம்பி கபிலனும் அப்பாவின் கவிதைகளைப் படித்து வளர்ந்தோம். இன்றைக்கு அவருடன் இணைந்து திரைப்படத்திற்கு பாடல் எழுதியுள்ளோம் என்பது ஆச்சரியமான விசயம்.

சிறப்பான பாடல் எது?
இதில் யார் எழுதிய பாடல் சிறந்த பாடல் என்று கேட்டால் எல்லாமே சிறப்பான பாடலாக வந்துள்ளது என்று மதன் கார்க்கி கூறியுள்ளார். சமீபத்தில் இப்படத்தில் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த திரைப்படம் மிக விரைவில் வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











