அஜித்தும், நானுமா?, எல்லாம் சுத்தப் பொய்: போனி கபூர்

By Siva

மும்பை: அஜித்துடன் 3 படங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது என்று வெளியான தகவல் குறித்து விளக்கம் அளித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.

ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படத்தையும் போனி தான் தயாரிக்கிறார்.

Three movie deal with Ajith?: Boney Kapoor reveals the truth

நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார் வினோத். இந்நிலையில் போனி கபூர் அஜுத்தை வைத்து 3 படங்கள் தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின.

இதை பார்த்த போனி கபூர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது,

அஜித்தும், நானும் சேர்ந்து 3 படங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து ஆக்ஷன் படம் பண்ணுகிறோம். அவரை வைத்து இந்தி படம் ஒன்றை எடுக்க ஆசைப்படுகிறேன், ஆனால் அவர் இதுவரை எதையும் உறுதி செய்யவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அஜித்தை வைத்து பாலிவுட் படத்தை தயாரிக்க விரும்புவதாக போனி கபூர் அடிக்கடி கூறி வருகிறார். ஆனால் அஜித் தான் இன்னும் சம்மதம் தெரிவிக்காமல் உள்ளார்.

நேர்கொண்ட பார்வையை அடுத்து அஜித் நடிக்கும் படம் ரீமேக் அல்ல. மாறாக அஜித்துக்காக வினோத் எழுதி வைத்துள்ள புதுக்கதை. ஆக்ஷன் கொஞ்சம் தூக்கலாக இருக்குமாம். அந்த படத்தில் அஜித் கார் பந்தய வீரராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்க திட்டமிட்டுள்ளாராம் வினோத்.

முன்னதாக நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என்றார்கள். ஆனால் அதன் பிறகு படத்தை ஜூலை மாத இறுதியில் ரிலீஸ் செய்ய போனி கபூர் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் நேர்கொண்ட பார்வை ரிலீஸ் எப்பொழுது என்று தெரியாமல் தல ரசிகர்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ரிலீஸ் தேதியை அறிவிக்குமாறு போனி கபூரிடம் அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மேலும் படம் குறித்த சில புகைப்படங்களை வெளியிடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X