தமிழ் சினிமாவில் இன்று என்னென்ன படங்கள் உலகம் முழுவதும் ரிலீஸ் தெரியுமா?
சென்னை: தமிழ் சினிமாவில் இன்று உலகம் முழுவதும் மூன்று படங்கள் ரிலீஸ் ஆகிறது.
வெள்ளிக்கிழமையான இன்று தமிழ் சினிமாவில் மூன்று படங்கள் ரிலீஸ் ஆகின்றன. அதாவது, இருட்டு, தனுசு ராசி நேயர்களே மற்றும் ஜடா ஆகிய படங்கள் ஆகும்.
இந்த மூன்று படங்களும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் மற்றும் கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ரிலீஸ் ஆகிறது.

சுந்தர் சி ஹீரோ
இதில் இருட்டு படம் துரை இயக்கத்தில் சுந்தர் சி. நடிப்பில் வெளியாகிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக புதுமுகம் சாக்ஷி சவுத்ரி நடித்துள்ளார். இந்தப்படத்தின் ட்ரெய்லரிலேயே சுந்தர் சி, லிப் டூ லிப் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடித்திருப்பது தெரியவந்துள்ளது.

ஜின் பேய்கள்
ஹாரர் படமாக உருவாகியுள்ள இருட்டு படத்தில் இஸ்லாமிய பேய்களான ஜின்களை மையப்படுத்தியிருப்பதாக இயக்குனர் துரை ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதனால் இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு புதியதாக இருக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஹரிஷ் கல்யாண்
இதனை தொடர்ந்து தனுசு ராசி நேயர்களே படமும் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. சஞ்சய் பாரதி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரெபா மோனிகா ஜான், திகங்கனா, யோகி பாபு ஆகியோர் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்.

கால்பந்து
பரியேறும் பெருமாள் படத்தை தொடர்ந்து நடிகர் கதிர் நடித்திருக்கும் ஜடா படமும் இன்றுதான் ரிலீஸ் ஆகிறது. கால்பந்தை மையமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும்
இந்தப் படத்தை அறிமுக இயக்குநரான குமரன் இயக்கியிருக்கிறார். இதில் கதாநாயகிகளாக ரோஷினி பிரகாஷ் மற்றும் சுவாஸ்திகா ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.

நடிகர் தினேஷ்
இதனை தொடர்ந்து இயக்குநர் பா ரஞ்சித்தின் தயாரிப்பில் இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படமும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக பணியாற்றிய ஆதியன் ஆதிரை இயக்கியிருக்கிறார். நடிகர் அட்டக்கத்தி தினேஷ், ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த 4 படங்களும் இன்று ரிலீஸ் ஆகிறது.


Click it and Unblock the Notifications











