ஆரோகணம், மயிலு, யாருக்குத் தெரியும்.. இன்றைய ரிலீஸ்!
சென்னை: இன்று வெள்ளிக்கிழமை மூன்று படங்கள் வெளியாகின்றன. மூன்றுமே சின்ன பட்ஜெட் படங்கள்.

முதலில் ஆரோகணம்
முதல் படம் ஆரோகணம். வெளியீட்டுக்கு முன்பே பலரது பாராட்டுகளைப் பெற்ற படம் இது. நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், விஜி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

'பழைய' மயிலு
ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட படம் மயிலு. பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வெளியாவதே சந்தேகம் என்றாகிவிட்ட இந்தப் படம், இப்போதுதான் வெளியாகிறது. மோசர் பேயரின் கடைசி படமாக இருக்குமோ என்று கிசுகிசுக்க வைக்கும் அளவு ரொம்ப டல்லடித்துப்போய் ரிலீசாகிறது படம். இளையராஜா இசையில் பாடல்கள் ஏற்கெனவே பிரபலமாகிவிட்டது மட்டுமே ப்ளஸ்.

யாருக்குத் தெரியும்?
'யாருக்குத் தெரியும்?' ஒரு த்ரில்லர் படம். யாரும் எதிர்பார்க்காத, முற்றிலும் புதிய கதை இந்தப் படம். கலாபவன் மணி, சஞ்சனா சிங், ஜெயப்பிரகாஷ் தவிர மற்றவர்கள் புதுமுகங்கள். அதிகம் பொறுமையைச் சோதிக்காத விறுவிறுப்பாக அமைந்துள்ள படம் இது.

எதிர்பார்ப்பில்லாம போங்க
தீபாவளி வரை இதுபோன்ற சிறு பட்ஜெட் படங்கள்தான் வெளியாகும் என்பதால், பெரிய எதிர்ப்பார்ப்பில்லாமல் பார்க்கப் போவது நல்லது.


Click it and Unblock the Notifications











