Don't Miss!
- News தங்கமான தங்கைக்கு திருமண பரிசு கொடுக்க ஆசைப்பட்ட அண்ணன்.. அடித்தே கொன்ற மனைவி
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Technology AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மூன்று முறை தேசிய விருது வென்ற சுரேகா சிக்ரி.. திடீரென மாரடைப்பால் உயிரிழப்பு.. பிரபலங்கள் இரங்கல்
மும்பை: பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை சுரேகா சிக்ரி மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 75.
1978ம் ஆண்டு வெளியான அரசியல் படமான கிசா குர்சி கா திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சுரேகா சிக்ரி.
மூன்று முறை தேசிய விருது வென்ற அவரது மரண செய்தியை அறிந்த பல பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக்கில் இணைந்த கபாலி பட நடிகை!
சுரேகா சிக்ரி காலமானார்
பாலிகா வது, பதாய் ஹோ, தமாஸ், மம்மோ உள்ளிட்ட ஏகப்பட்ட படைப்புகளில் துணை நடிகையாக நடித்து பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சுரேகா சிக்ரி. கடந்த சில மாதங்களாக உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அவர், இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
3 தேசிய விருதுகள்
சிறந்த துணை நடிகையான சுரேகா சிக்ரி தனது அற்புதமான நடிப்புக்காக மூன்று முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார். 1988ம் ஆண்டு வெளியான தமாஸ், 1994ம் ஆண்டு வெளியான மம்மோ மற்றும் 2019ல் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான பதாய் ஹோ உள்ளிட்ட மூன்று படங்களுக்காக தேசிய விருதை அவர் வென்றுள்ளார்.
ஊர்வசி ரவுத்தேலா இரங்கல்
பிரபல பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தேலா சுரேகா சிக்ரியின் இளம் வயது புகைப்படத்தை பதிவிட்டு அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்களும் சுரேகா சிக்ரியின் திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ரந்தீப் ஹூடா இரங்கல்
சல்மான் கானின் ராதே படத்தில் வில்லனாக நடித்த பிரபல பாலிவுட் நடிகர் ரந்தீப் ஹூடா தனது ட்விட்டர் பக்கத்தில் சுரேகாஜியின் இளம் வயது மற்றும் சமீபத்திய புகைப்படங்களை ஷேர் செய்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
மனோஜ் பாஜ்பாய் இரங்கல்
தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் மூலம் சர்வதேச அளவில் பிரபலமான நடிகர் மனோஜ் பாஜ்பாய் தனது ட்விட்டர் பக்கத்தில், மிகப்பெரிய சோக செய்தி, திறமை வாய்ந்த நடிகை சுரேகாஜி நம்மை விட்டு பிரிந்து சென்றுள்ளார் என பதிவிட்டு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். நடிகை ஊர்மிளா, நீனா குப்தா என ஏகப்பட்ட பாலிவுட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
லேடி கெட்டப் போடுறது எவ்ளோ கஷ்டம்ப்பா.. மெலோடியாக கவின் எப்படி மாறுறாரு பாருங்க.. மேக்கிங் வீடியோ!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!