போலீசாக மிரட்டும் ரஜினி.. ஈடுகொடுக்க 3 வில்லன்கள்.. தர்பார் குறித்து புதிய தகவல்கள்!
சென்னை: தர்பார் படத்தில் ரஜினிக்கு வில்லனாக மூன்று பாலிவுட் நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அரசியலுக்கு வருவதாக அறிவித்த பிறகும் கூட படங்களில் கமிட்டாகி பிஸியாக உள்ளார்.
தற்போது ஏஆர் முருகதாஸின் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

போலீசாக ரஜினி
இந்நிலையில் தர்பார் படம் குறித்து மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீசாக நடிக்கிறார்.

நயன்தாரா ஹீரோயின்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் போலீஸ் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார்.

மூன்று வில்லன்கள்
இந்நிலையில் படத்தில் ரஜினிக்கு வில்லன்களாக மூன்று பேர் நடிக்கின்றனர். மூன்று பேருமே பாலிவுட் நடிகர்கள்தான். ஏற்கனவே படத்தில் சுனில் ஷெட்டி, பிரதீக் பாபர் ஆகியோர் வில்லன் பாத்திரத்தை ஏற்றுள்ளனர்.

ஈடுகொடுக்க
அவர்களுடன் மூன்றாவதாக நவாப் ஷா சேர்ந்துள்ளார். வெயிட்டான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் ரஜினிகாந்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் படத்தின் மூன்று வில்லன்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பொங்கல் விருந்து
தர்பார் படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ரிலீஸாக உள்ளது. இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











