சைஸ் என்ன, செக்சியா இருப்பியோ?: பெண் பத்திரிகையாளரிடம் நடிகர் சில்மிஷம்
மும்பை: நடிகரும், இயக்குனருமான ரஜத் கபூர் மீது பத்திரிகையாளர் உள்பட 3 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
தனுஸ்ரீயின் துணிச்சலை பார்த்து பிற பெண்களும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டது குறித்து வெளிப்படையாக பேசுகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகரும், இயக்குனருமான ரஜத் கபூர் மீது 3 பெண்கள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர்.
அதில் ஒரு சம்பவம் கடந்த 2007ம் ஆண்டு நடந்துள்ளது.

பேட்டி
2007ம் ஆண்டு பெண் பத்திரிகையாளர் ஒருவர் ரஜத் கபூரிடம் தொலைபேசி மூலம் பேட்டி எடுத்துள்ளார். அப்போது அவரோ, உங்கள் குரல் போன்று நீங்களும் செக்சியாக இருப்பீர்களா என்று கேட்டுள்ளார். மேலும் அந்த பெண்ணின் உடல் அமைப்பின் அளவை கேட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் தற்போது தான் பேசியுள்ளார்.

நடிகை
அமெரிக்காவில் வசிக்கும் நடிகையும், மாடலுமான பெண் ரஜத் கபூர் மீது புகார் தெரிவித்துள்ளார். படம் தொடர்பாக இருவரும் சந்தித்து பேசிய பிறகு ரஜத் அந்த நடிகைக்கு அடிக்கடி தனது நண்பர் சவுரப் சுக்லாவின் செல்போனில் இருந்து கால் செய்துள்ளார். காலியான வீட்டில் உங்களுடன் ஷூட் செய்ய விரும்புவதாக ரஜத் தெரிவித்துள்ளார்.
ரஜத் கபூர்
மூன்று பெண்கள் பாலியல் புகார் தெரிவித்த நிலையில் ரஜத் கபூர் ட்விட்டரில் மன்னிப்பு கோரியுள்ளார். தன் வாழ்நாள் முழுவதும் நல்லதை செய்து, நாகரீகமாக நடந்து கொள்ள முயற்சி செய்வதாகவும், இருப்பினும் எங்காவது வேறு மாதிரி நடந்து கொண்டு யாருடைய மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னித்துவிடுமாறு கூறியுள்ளார்.
வேலை
நல்ல மனிதராக இருப்பது தான் வேலையை விட எனக்கு முக்கியமானது. அதற்காக தான் முயற்சிக்கிறேன். இனி கூடுதலாக முயல்வேன் என்று ரஜத் கபூர் தெரிவித்துள்ளதை ஏற்க ரசிகர்கள் தயாராக இல்லை. செய்வதை செய்துவிட்டு மன்னிப்பு கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா என்று அவரை கேட்டுள்ளனர். தற்போது 3 பெண்கள் கூறியுள்ளார்கள், இன்னும் எத்தனை பேரோ என்று அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











