இது காலா கில்லா… காலா திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவு !
சென்னை : காலா திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவடைவதை ரஜினியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இணையத்தில் #3yearsofkaala என்ற ஹேஷ்டேக் டிரெண்டாக்கி வருகின்றனர்.
இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி, ஹியூமா குரோஷி, நானா படேகர், ஈஸ்வரி ராவ்,வத்திக்குச்சி திலீபன், சாக்ஷி அகர்வால் என பலர் நடித்திருந்தனர்.

காலா
2018ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் காலா. இத்திரைப்படத்தில் மும்பையில் உள்ள தாராவி மக்களின் மதிக்கத்தக்க மனிதராக அட்டகாசமாக நடித்து இருப்பார் ரஜினிகாந்த். அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின் மூலம் நிலத்தை அபகரிக்கத் துடிப்பவர்களை எதிர்த்து, தாராவி மக்கள் ஒன்று திரண்டு போராடுகிறார்கள்.

அசாத்தியமான நடிப்பு
இந்த திரைப்படம் வெளியாகி 3 வருஷம் ஆனாலும், ரஜினியின் அந்த வசனத்தை இப்போ கேட்டாலும் சிரிப்புத்தான் வருது. குமாரு... யார் இவரு... என்று கேட்பது ரஜினியின் அசாத்தியமான நடிப்புத்தான். மேலும், மனைவியின் கொஞ்சிக்கொண்டே நிஜமாவே பெருமாளைக் காதலிச்சியா என்று இப்போ வரைக்கும் பல சபாஷ்களை பெற்று வருகிறார் ரஜினி.
Recommended Video

இசை
இந்த திரைப்படத்திற்கு பக்கபலமா இருந்தது சந்தோஷ் நாராயணனின் இசை. மீட்டாத வீணை இப்போதும் பலரின் வாட்ஸ் அப் ஸ்டேடசாகவும் இருந்து வருகிறது. இசையில் பாடல்கள் படத்தின் வெவ்வேறு உணர்வு நிலைகளை பெற்றுத்தந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

#3yearsofkaala
நிலம் உங்களுக்கு அதிகாரம், எங்களுக்கு வாழ்க்கை என்று கார்ப்பரேட் மற்றும் அரசியல் அதிகாரத்துக்கு எதிராக குரல் எழுப்பிய காலா திரைப்படம் வெளியாகி 3ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனை ரஜினியின் ரசிகர்கள் #3yearsofkaala என்ற ஹேஸ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர். மேலும், படக்குழுவினருக்கும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications