ஆசை படத்தில் அஜித்துக்கு டப்பிங் கொடுத்தது இந்த நடிகரா..? இதுவரை வெளிவராத சீக்ரெட்
சென்னை: கோலிவுட்டின் முன்னணி ஹீரோவாக வலம் வரும் அஜித், அடுத்து தனது 62வது படத்தில் நடிக்கவுள்ளார்.
முன்னதாக 1995ம் ஆண்டு வெளியான ஆசை அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது.
வசந்த் இயக்கத்தில் அஜித், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.
இந்நிலையில், ஆசை படத்தில் அஜித் தனது சொந்த குரலில் டப்பிங் கொடுக்கவில்லை என்ற உண்மை தற்போது தெரியவந்துள்ளது.

ஆசை நாயகன் அஜித்
1993ல் அமரவாதி திரைப்படம் மூலம் ஹீரோவான அஜித், 1995ம் ஆண்டு தான் ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். ஆசை திரைப்படம் வெளியான பின்னர் 'ஆசை நாயகன் அஜித்' என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு அவரது கேரியர் மாறியது. வசந்த் இயக்கத்தில் அஜித், சுவலட்சுமி, பிரகாஷ்ராஜ், வடிவேலு, மறைந்த நடிகர் மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அஜித் - சுவலட்சுமி இடையேயான காதலும், அதனை சொன்ன விதமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

அஜித்துக்கு குரல் கொடுத்த ஹீரோ
முக்கியமாக இந்தப் படத்தில் தேவாவின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் அதிரி புதிரியாக ஹிட் அடித்தன. 'மீனம்மா', 'கொஞ்சநாள் பொறு தலைவா', 'புல்வெளி புல்வெளி' பாடல்கள் இன்றும் ரசிகர்களின் வாட்ஸப் ஸ்டேட்டஸ்களை அலங்கரித்து வருகின்றன. இந்நிலையில், இந்தப் படத்தில் அஜித்துக்கு பிரபல ஹீரோ ஒருவர் தான் டப்பிங் கொடுத்துள்ளாராம்.

நோ சொன்ன இயக்குநர்
முதலில் அஜித் தானே டப்பிங் கொடுப்பதாகக் கூறியுள்ளார். ஆனால், அவரின் வாய்ஸ் செட் ஆகாததால் இயக்குநர் வசந்த் அதனை மறுத்துவிட்டாராம். அதனால் அவருக்குப் பதிலாக நடிகர் சுரேஷை வாய்ஸ் ஓவர் கொடுக்க வைத்துள்ளார் வசந்த். பன்னீர் புஷ்பங்கள் படம் மூலம் பிரபலமான 80ஸ் ஹீரோ சுரேஷ், ஆசை படத்தில் அஜித்துக்காக அல்டிமேட்டாக வாய்ஸ் கொடுத்து பிரமிக்க வைத்துள்ளார்.

அஜித்தின் சபதம்
ஆசை திரைப்படம் 20 நாட்களுக்கும் மேல் ஓடி ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அஜித்துக்கு இந்தப் படம் மிக தரமான ஹிட்டாக அமைந்தது. அதேநேரம் இனிமேல் தனது படங்களுக்கு நான் தான் டப்பிங் கொடுப்பேன் என்பதில் உறுதியாக இருந்துள்ளார் அஜித். அதன்படி, அடுத்தடுத்து அஜித் நடித்த படங்களுக்கு அவரே தான் குரல் கொடுத்துள்ளார். அதேபோல், ஆசை படத்தில் அஜித்துக்காக குரல் கொடுத்த சுரேஷ், 2010ல் வெளியான அசல் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











