Actor Daniel balaji: அவனா.. டேனியல் பாலாஜியை பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்!

சென்னை: தமிழ் சினிமாவில் மிரட்டலான மற்றும் சைக்கோத்தனமான வில்லனாக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் பிரபல நடிகர் டேனியல் பாலாஜி. இவரது நடிப்பில் டேனியல் பாலாஜி என்ற நடிகர் எப்போதுமே தெரியமாட்டார். மாறாக, இப்படி ஒரு கேரக்டர் நிஜத்தில் இருந்தால் எப்படி இருக்குமோ அதுபோன்ற ஒரு எக்ஸ்பீரியன்சை ரசிகர்களுக்கு கொடுத்தவர் டேனியல் பாலாஜி. வித்தியாசமான கெட்டப்புகளிலும் சிறப்பாக பொருந்தி, ரசிகர்களுக்கு மிகச்சிறந்த திரை அனுபவத்தை கொடுத்தவர் டேனியல் பாலாஜி. இவர் அதிகமான படங்களில் நடிக்கவில்லை என்ற குறை ரசிகர்களுக்கு எப்போதுமே உண்டு.

இதற்கு ஒரு பேட்டியொன்றில் டேனியல் பாலாஜி விடையளித்துள்ளார். எல்லா படங்களையும் ஏற்றுக் கொண்டு கிடைத்த நல்ல பெயரை கெடுத்துக் கொள்ளக்கூடாது என்பதில் தான் கவனமாக இருந்ததாக அவர் அந்தப் பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். அதற்கேற்ப அவர் நடித்த அனைத்து படங்களுமே அவருக்கு சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றுத் தந்தவைதான். இவரது நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் படங்கள் இவரது பெயரை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும். நேற்றிரவு மாரடைப்பு காரணமாக காலமாகியுள்ளார் டேனியல் பாலாஜி. அவர் இன்னும் அதிகமான படங்களில் நடித்திருக்கலாமோ என்ற ஆதங்கம்தான் ரசிகர்களிடையே தற்போது அதிகமாக காணப்படுகிறது.

Throwback interview of Daniel balaji about Rajinikanth hails his Acting in Vettaiyadu Vilaiyadu movie

நடிகர் டேனியல் பாலாஜி: நடிகர் டேனியல் பாலாஜி தமிழ் சினிமாவில் மிரட்டலான வில்லனாக படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். சின்னத்திரையில் சித்தி சீரியல் மூலம் தன்னை மிகச்சிறப்பாக வெளிப்படுத்திக் கொண்ட டேனியல் பாலாஜி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் மிகச்சிறப்பான ரோல்களில் குறிப்பாக வில்லன் கேரக்டர்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தினார். இவரது வில்லன் கேரக்டர்களுக்கு மிகப்பெரிய உதாரணங்களாக வேட்டையாடு விளையாடு, பொல்லாதவன் ஆகிய படங்கள் என்றென்றும் காணப்படும். திருமணமே செய்துக் கொள்ளாமல் வாழ்ந்துவந்த டேனியல் பாலாஜி, நேற்றிரவு மாரடைப்பால் காலமானார்.

ரசிகர்களின் ஆதங்கம்: அதிகமான படங்களில் நடிக்காமல், தன்னுடைய நடிப்பிற்கு தீனி போடும் கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்துவந்த டேனியல் பாலாஜி, இன்னும் அதிகமான படங்களில் நடித்திருக்கலாம், இந்த திரையுலகம் அவரை சிறப்பாக பயன்படுத்தியிருக்கலாம் என்ற ஆதங்கம் தற்போது ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. அதிகமான படங்களில் நடிக்காததற்கு, காரணத்தையும் தன்னுடைய பேட்டியொன்றில் அவர் கூறியுள்ளார். அனைத்து படங்களையும் தேர்ந்தெடுத்து நடித்து, அதன்மூலம் தனக்கு கிடைத்துள்ள நல்ல பெயரை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை என்று அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

டேனியல் பாலாஜியை பாராட்டிய ரஜினிகாந்த்: வேட்டையாடு விளையாடு படத்தில் கமலுக்கு வில்லனாக நடித்திருந்தார் டேனியல் பாலாஜி. இந்தப் படத்தில் அவரது மிரட்டலான நடிப்பு கமலுக்கு டஃப் கொடுக்கும் வகையில் அமைந்திருந்தது. ஒரு படத்தின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக கருதப்படுவது அந்தப் படத்தின் வில்லன்தான் என்று கூறப்படுவதுண்டு. அந்த வகையில், இந்தப் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்திருந்தார் டேனியல் பாலாஜி. இதனிடையே இந்தப் படத்தின் பிரீமியர் ஷோவை பார்த்துவிட்டு டேனியல் பாலாஜியை ரஜினிகாந்த் பாராட்டியது குறித்து தனது பேட்டியொன்றில் அவர் முன்னதாக பகிர்ந்திருந்தார்.

15 நிமிடங்கள் பாராட்டு: இந்தப் படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்த ரஜினிகாந்த், கௌதம் மேனனிடம் படத்தின் காதல் உள்ளிட்ட பலவற்றை புகழ்ந்துவிட்டு ஒரு கட்டத்தில், யார் அந்த பையன் என்று கேட்டதாகவும் தூரத்தில் நின்றுக் கொண்டிருந்த தன்னை கௌதம் மேனன் அறிமுகப்படுத்தியதாகவும் தெரிவித்த டேனியல் பாலாஜி, இதையடுத்து தன் தோள்மீது கையை வைத்துக் கொண்டு 15 நிமிடங்கள் தன்னிடம் அந்தப் படம் மற்றும் தனது கேரக்டர் குறித்து ரஜினிகாந்த் பேசியதாகவும் பகிர்ந்திருந்தார். கமல் முன்பு இதுபோன்ற நடிப்பை வெளிப்படுத்துவது சாதாரணமல்ல என்று ரஜினி பாராட்டியதாகவும் டேனியல் பாலாஜி நெகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.

சொர்க்கம் போன்ற தருணம்: அவர் எப்போதுமே யாரிடமும் இதுபோல பேசியதில்லை என்று அருகிலிருந்தவர்கள் அனைவரும் தன்னிடம் கூறியதாகவும் டேனியல் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார். இதனிடையே, தன்னிடம் பேசி முடித்துவிட்டு காரில் ஏற போனவர், திரும்பி தன்னை பார்த்து ஹாய், ஹாய், பாய் என்று தன்னிடம கூறிவிட்டு அவர் புறப்பட்டு சென்றதாகவும் பகிர்ந்த டேனியல் பாலாஜி, அந்த தருணம் ஹெவன் போன்று இருந்ததாகவும் உளப்பூர்வமான மகிழ்ச்சியை தன்னுடைய பேட்டியில் தெரிவித்திருந்தார். ரஜினியிடமே இத்தகைய பாராட்டை பெற்றவர் டேனியல் பாலாஜி என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X