வீடு புகுந்து மிரட்டிய தயாரிப்பாளர்... கேப்டனுக்கு கால் பண்ண ஷாம்... அடுத்த நொடியில் நடந்த அதிசயம்!

சென்னை: விஜய் நடிப்பில் பொங்கல் ஸ்பெஷலாக வெளியான வாரிசு படத்தில் ஷாமும் நடித்திருந்தார்.

விஜய்க்கு அண்ணனாக நடித்த ஷாம், நீண்ட இடைவேளைக்குப் பின்னர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

வாரிசு படத்தில் நடித்த பின்னர் பல யூடியூப் சேனல்களுக்கும் அவர் தொடர்ந்து பேட்டிக் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், கேப்டன் விஜயகாந்த் தனக்கு செய்த உதவி குறித்து மிக நெகிழ்ச்சியாகக் கூறியுள்ளார் ஷாம்.

 12 பி ஹீரோ ஷாம்

12 பி ஹீரோ ஷாம்

2001ம் ஆண்டு வெளியான 12 பி திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் ஷாம். முதல் படத்திலேயே அப்போது முன்னணி நடிகைகளாக இருந்த சிம்ரன், ஜோதிகா இருவருக்கும் ஜோடியாக நடித்து அசத்தியிருந்தார். கோலிவுட்டின் சாக்லேட் பாயாக வலம் வந்த ஷாம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, லேசா லேசா, இயற்கை, உள்ளம் கேட்குமே, 6 போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

 வீடு புகுந்து மிரட்டல்

வீடு புகுந்து மிரட்டல்

12 பி-க்கு முன்னர் விஜய்யின் குஷி படத்தில் அவரது நண்பராக நடித்திருந்தார். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஷாம், விஜய்யின் வாரிசு படத்தில் நடித்திருந்தார். வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான வாரிசு படத்தில், விஜய்க்கு அண்ணனாக நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார் ஷாம். அதன் பின்னர் மீண்டும் ரசிகர்களின் கவனம் பெற்றுள்ள ஷாம், தன்னை ஒரு தயாரிப்பாளர் வீடு புகுந்து மிரட்டியது குறித்து கூறியுள்ளார்.

 காப்பாற்றிய கேப்டன்

காப்பாற்றிய கேப்டன்

பிரபல யூடியூப் சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டியில், "நான் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அதற்கான முழு சம்பளமும் கொடுத்தால்தான் டப்பிங் பேச முடியும் என புரோடியூசரிடம் சொல்லிவிட்டேன். அதனால் அவர் 10 அடியாட்களை என் வீட்டிற்கு அனுப்பி மிரட்டினார். இதனால் பயந்துபோன நான் கேப்டன் விஜயகாந்துக்கு செல்போன் மூலம் தொடர்புகொண்டு விசயத்தை சொன்னேன். அதன்பிறகு தயாரிப்பாளருக்கு கால் பண்ண கேப்டன், இது இனிமேல் என் பிரச்சினை என்று அடியாட்களை உடனே அங்கிருந்து வெளியேற வைத்துள்ளார்.

 கேப்டன்னா சும்மாவா..?

கேப்டன்னா சும்மாவா..?

அதுமட்டும் இல்லாமல் தயாரிப்பாளரிடம் பேசிய கேப்டன் விஜயகாந்த், சமபள விவாகரத்தையும் தீர்த்து வைத்துள்ளாராம். இதனை ரொம்பவே எமோஷனலாக பேசியுள்ளார் ஷாம். சில தினங்களுக்கு முன்னர் பகீரா பட ப்ரோமோஷனில் பேசியிருந்த பிரபுதேவா, தனக்கு மிகவும் பிடித்த படம் வானத்தை போல எனக் கூறியிருந்தார். அதற்கு விஜயகாந்த் சாருடன் நடித்தது தான் காரணம் என அவர் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. திரையுலகில் விஜயகாந்த் ஒரு நடிகராக மட்டும் இல்லாமல், பலரின் நம்பிக்கைக்குரிய கலைஞனாக வலம் வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X