Thudarum Box Office: அடுத்தடுத்து 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் படங்கள்.. அடித்து ஆடும் லாலேட்டன்.. துடரும் வசூல்!
திருவனந்தபுரம்: பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்த எம்புரான் திரைப்படம் கடந்த மார்ச் 27ம் தேதி வெளியான நிலையில், மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் வசூலையும் கடந்து அதிகபட்சமாக 250 கோடி வரை வசூல் செய்தது. இந்நிலையில், ஏப்ரல் மாதம் 25ம் தேதி வெளியான துடரும் படத்தின் மூலம் இன்னொரு 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் படத்தைக் கொடுத்திருக்கிறார் மோகன்லால்.
பாலிவுட்டில் ஷாருக்கான் 4 ஆண்டுகள் படங்களை கொடுக்காமல் ரெஸ்ட் எடுத்து வந்த நிலையில், ஒரே வருஷத்தில் பதான், ஜவான், டன்கி என சுமார் 2500 கோடி வசூலை பாலிவுட்டில் கொடுத்து ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் வியப்பில் ஆழ்த்தி விட்டார்.

மோகன்லால் நடிப்பில் வெளியான படங்கள் தொடர்ந்து ஃபிளாப் ஆகி வந்த நிலையில், பலரும் லாலேட்டனை ட்ரோல் செய்து வந்தனர். இந்நிலையில், மலையாள திரையுலகில் அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களை இந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் இறக்கி மாஸ் காட்டி வருகிறார்.
சூப்பர் ஹிட் அடித்த துடரும்: இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால், ஷோபனா நடிப்பில் கடந்த வாரம் வெளியான துடரும் திரைப்படத்துக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்துள்ளது. ஃபேமிலி சென்டிமென்ட் டிராமாவாக ரசிகர்களை கவரும் விதமாக தருண் மூர்த்தி இந்த படத்தை இயக்கி ஒட்டுமொத்த மலையாள ரசிகர்களின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். பான் இந்தியா படமாக வெளியான எம்புரான் திரைப்படம் 250 கோடி வசூல் ஈட்டிய நிலையில், அடுத்த மாதமே இன்னொரு தரமான சம்பவத்தை மோகன்லால் இறக்குவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

100 கோடி வசூல்: படம் வெளியான 6 நாட்களில் அதிகபட்சமாக 100 கோடி வசூலை துடரும் படம் அள்ளி அசால்ட்டு காட்டியுள்ளது என அதிகாரப்பூர்வ அறிவிப்பை கொண்டாட்டத்துடன் படக்குழுவே வெளியிட்டுள்ளது. மோகன்லால் எம்புரான் படத்தின் மூலம் ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் அரசியல் சார்ந்த பிரச்சனைகளையும் சந்தித்த நிலையில், எந்தவொரு தொல்லையும் இன்றி நிம்மதியான வெற்றியை இந்த துடரும் படம் கொடுத்து அவரையும் ஹேப்பியாக்கி உள்ளது.
ஜெயிலர் 2: ஜெயிலர் படத்தில் கேமியோ ரோலில் நடித்து மரண சம்பவம் செய்த மோகன்லால் ஜெயிலர் 2ம் பாகத்திலும் இணைந்து நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், பாலகிருஷ்ணா, சிவராஜ்குமார் என மெகா கூட்டணி உருவாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து மோகன்லால் படங்கள் சொதப்பி வந்த நிலையில், மீண்டும் தனது பலத்தை மலையாள திரையுலகிலும் இந்திய பாக்ஸ் ஆபீஸிலும் நிலை நிறுத்தியுள்ளார் மோகன்லால்.
200 கோடிக்கு வாய்ப்பு: மோகன்லால், ஷோபனா நடிப்பில் குறைவான தியேட்டர்களிலேயே வெளியான துடரும் படம் பாசிட்டிவ் விமர்சனங்களுக்குப் பிறகு அதிரடியாக தியேட்டர்கள் அதிகரித்து மக்கள் தொடர்ந்து அந்த படத்தைக் கொண்டாடி வருகின்றனர். நாளை மே 1ம் தேதி விடுமுறை தினம் என்பதால் அப்படியே இந்த வாரமும் தொடர்ந்து படம் ஓடினால் 200 கோடி வரை வசூல் வர அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் குறைந்தபட்சம் 150 முதல் 175 கோடி வரை உறுதியாக வசூல் செய்யும் என்கின்றனர். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு பெரிய லாபத்தை இந்த படம் கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











