துடிக்குது புஜம் ஜெயிப்பது நிஜம்... விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து லோகேஷ் கனகராஜ் சிலிர்ப்பு
சென்னை : நடிகர் கமல், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ள படம் விக்ரம்.
லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கவுள்ள நிலையில் முதல்கட்ட பணிகள் ஏறக்குறைய முடிந்துள்ளன.
விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள நிலையில் முன்னதாக ரசிகர்களுக்கு ஆனந்த அதிர்ச்சியளிக்கும்வகையில் தற்போது படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

விக்ரம் படத்தில் கவனம்
அரசியல் பிரவேசத்தில் பிசியாக இருந்த கமல்ஹாசன் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறைக்கு வராமல் இருந்தார். தற்போது தேர்தல் முடிந்துள்ள நிலையில் மீண்டும் படங்களில் கவனம் செலுத்தவுள்ளார். இந்தியன் 2 படப்பிடிப்பு தள்ளிப் போயுள்ள நிலையில் தற்போது விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார்.

கமலை மிரட்டும் 5 வில்லன்கள்
ராஜ்கமல் இன்டர்நேஷனலும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தை மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். படத்தின் ஒவ்வொரு தேர்வையும் இவர் மிகவும் சிரத்தையுடன் செய்து வருகிறார். படத்தில் கமல்ஹாசனை மிரட்ட 5 வில்லன்கள் தயாராக உள்ளனர்.

எகிரும் எதிர்பார்ப்பு
விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ், நரேன் உள்ளிட்டவர்களுடன் முன்னணி நடிகர் ஒருவரும் கமலை மிரட்ட தயாராகி வருகின்றனர். விஜய், ரஜினியை தொடர்ந்து கமலுக்கும் வில்லனாகிறார் விஜய் சேதுபதி. இதனால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கலக்கும் விக்ரம் டீம்
ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களே அப்டேட் இல்லாமல் இருக்கும் நிலையில், தற்போது விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக்கை சூட்டிங் துவங்குவதற்கு முன்னரே வெளியிட்டு அதிரடி கிளப்பியுள்ளது படக்குழு. இது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கமல் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

துடிக்குது புஜம்.. ஜெயிப்பது நிஜம்
இந்நிலையில் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள டைரக்டர் லோகேஷ் கனகராஜ் ஆரம்பிச்சிட்டோம் என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தியுள்ளார். மேலும் கமலின் முந்தைய படமான விக்ரம் படத்தின் டைட்டில் பாடலின் வரிகளையும் ட்வீட் செய்துள்ளார். துடிக்குது புஜம், ஜெயிப்பது நிஜம் என்ற அந்த பாடலின் வரிகள் ரசிகர்களுக்கு மேலும் உற்சாகத்தை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications











