Thug Life Audio Launch: மணி ரத்னத்திற்காக ஒருமையில் கவிதை வாசித்த அபிராமி.. கண்ணீர் சிந்திய நாசர்!
சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படமான தக் லைஃப் படம் வரும் ஜூன் மாதம், 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது மே 24ஆம் தேதி சென்னை புறநகர் பகுதியில் உள்ள கல்லூரியில் நடைபெற்று வருகிறது.
இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நாசர் பேசுகையில் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக, இயக்குநர் மணிரத்னம் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் குறித்து சிலாகித்து பேசினார். அவர் பேசுகையில், " நான் நடித்த 600க்கும் மேற்பட்ட படங்களில் மிகச்சிறந்த 20 படங்கள் என்று பிழிந்து எடுத்தால் அது கமல் சார் மற்றும் மணி சார் படங்களாகத்தான் இருக்கும்" என்று பேசினார். நாசர் இவ்வாறு பேசும்போது, தழுதழுத்த குரலில் பேசினார். கண்ணீர் சிந்தினார் என்றுதான் கூறவேண்டும். மேலும் அவரது நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் எழுதி அனுப்பிய கடிதத்தை கமல்ஹாசனுக்காக மேடையில் வாசித்தார்.
அதைத் தொடர்ந்து நடிகை அபிராமி பேசுகையில், " நான் இந்த படத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. கமல் சார் என்னைப் போன்ற ஏகலவன்களிடம் கட்டை விரல் கேட்காத துரோணாச்சாரியார் என்று பேசினார். மேலும் அபிராமி மேடைக்கு வரும்போது குட்டிக் கடிதம் ஒன்றை கொண்டு வந்தார்.

கவிதைகள்: அந்த கடிதத்தில் மணி ரதனம், ஏ.ஆர். ரகுமான் மற்றும் கமல்ஹாசனுக்கான அவர்களது படங்களில் இருந்தே கவிதைகள் எழுதிக் கொண்டு வந்தார். அவர் அந்த கவிதைகளை வாசிக்கும் போது, " கண்ணுக்கு மை அழகு, கவிதைக்கு பொய் அழகு, நம் இசைக்கு நீ அழகு, உன்னை ரசிப்பதால் நான் அழகு" என்று ஏ.ஆர் ரகுமானுக்கு எழுதிய கவிதையை வாசித்தார்.
மரணப் படுக்கையிலும்: அதன் பின்னர், மணி சார்க்காக எழுதியதில் ஒருமையில் நீ என்று இருப்பதால் தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறிவிட்டு அந்த கவிதையை வாசித்தார். அதாவது, " உன் இயக்கத்தில் நான் நடித்த ஒவ்வொரு மணித்துளியும் மரணப் படுக்கையிலும் மறக்காது என் மணியே" என்று இருந்தது அந்த கவிதை. அதன் பின்னர் உலக நாயகன் கமல்ஹாசனுக்காக எழுதிய கவிதையை, அவருடன் அபிராமி இணைந்து நடித்த விருமாண்டி படத்தில் இடம்பெற்ற பாடலில் இருந்து எடுத்துள்ளார்.

கமல்ஹாசனுக்கு கவிதை: கமல்ஹாசனுக்கு எழுதிய கவிதையில், " உன் கூட நான் கூடி நடித்திட எனக்கு படம் இது ஒன்னு போதுமா? நூறு படம் வேண்டும், கேட்கிறேன் அந்த சாமியை.. இந்த சாமியை" என்று அந்த கவிதை அமைந்துள்ளது. அவரது இந்த கவிதை பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் அவரது கவிதை தொடர்பான வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. மேலும் அந்த மேடையில் அபிராமி விருமாண்டி படத்தில் இடம் பெற்ற ’உன்னைவிட இந்த உலகத்தில் சிறந்தது” பாடலையும் பாடினார்.


Click it and Unblock the Notifications











