Thug Life Audio Launch: Beep பாட்டு! ரெட் கார்டு! ஒரு டேஷ்ஷும் வேண்டாம் போடா.. ஆடியோ லாஞ்ச்சில் அழுத சிம்பு!

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படமான தக் லைஃப் படம் வரும் ஜூன் மாதம், 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது மே 24ஆம் தேதி சென்னை புறநகர் பகுதியில் உள்ள கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சிம்பு பல விஷயங்களைப் பேசினார். குறிப்பாக பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசும்போது, " நான் ஏ.ஆர். ரஹ்மான் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். அதுவும் நான் எனது சிறு வயதில் இருந்தே அவரை தொந்தரவு செய்துள்ளேன். இது மட்டும் இல்லாமல், Beep பாடல் பிரச்னை குறித்து உங்கள் அனைவருக்கும் தெரியும். அந்த காலத்தில் நான் பெரும் பிரச்னைகளை எதிர் கொண்டேன். அப்போது வெளியாக இருந்த அச்சம் என்பது மடமையடா படத்தின் டிரைலரில் பாடலை இடம் பெறச் செய்து எனக்காக சப்போர்ட் செய்தவர். அவருக்கு நான் எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

Thug Life Audio Launch STR Simbu Emotional And Stylish Speech Goes Trending

ரெட் கார்டு: நான் சிறு வயதில் இருந்தபோது வெளியான அஞ்சலி படத்தில், மணிரத்னம் சார் என்னை ஏன் கூப்பிடவில்லை என்று எனது அப்பாவிடம் கேட்டுக் கொண்டு புலம்பினேன். ஆனால் எனது அப்பா என்னை சமாதானப்படுத்தினார். நான் வளர்ந்த பின்னர், பல மசாலா படங்களைச் செய்தேன். அப்போது எல்லாம் மணி சார் படத்தில் நான் நடிக்கவே மாட்டேன் என்று நினைத்துக் கொண்டேன். ஒருமுறை எனக்கு ரெட் கார்டு பிரச்னை வந்தது. அப்போது என்னை வைத்து படம் எடுக்க, எந்த தயாரிப்பாளர்களும் முன் வரவில்லை. அப்போது என்னை அழைத்து, செக்கச் சிவந்த வானம் என்ற படம் எடுத்தார் மணி சார்.

ஒரு டேஷ்ஷும் வேண்டாம்: அதன் பின்னர் அவருடன் நான், பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க வேண்டி இருந்தது. ஆனால் முடியவில்லை. அதன் பின்னர் என்னை மீண்டும் தக் லைஃப் படத்திற்கு அழைத்து வந்துள்ளார். இந்த படத்தில் நான் ஒரு காட்சியில் கமல் சாருடன் நடிக்க வேண்டும். அப்போது நான் கமல் சார் குரலில் அவரைப் போலவே நான் இமிடேட் செய்யவேண்டும் என்று, மணி சார் கூறினார். அந்த டயலாக், ஒரு டேஷ்ஷும் வேண்டாம் போடா என்று கூறினேன்" என்று பேசினார்.

Thug Life Audio Launch STR Simbu Emotional And Stylish Speech Goes Trending

கண்ணீர்: தொடர்ந்து அவர் பேசுகையில், " சிறுவயதில் நான் மிகவும் கஷ்டப்பட்டேன். மற்ற குழந்தைகள் ஜாலியாக இருக்கும்போது, நான் மட்டும் ஷூட்டிங் மற்றும் படிப்பு என இருந்தேன். அது எனக்கு கஷ்டமாக இருந்தது. ஆனால் அப்படி என்னை எனது பெற்றோர்கள் வழிநடத்தியதால்தான் 40 ஆண்டுகளுக்குப் பின்னர், நான் கமல்ஹாசன் சார் படத்தில் நடித்துள்ளேன் என்று அழுது கொண்டே கூறினார். மேலும் இந்த விழாவுக்கு எனது அப்பாவை நான் வரவேண்டாம் என்று கூறினேன். காரணம் அவர் எமோஷனல் ஆகிவிடுவார் என்று நினைத்தேன், ஆனால் நானே எமோஷனலாகி பேசிக்கொண்டு இருக்கிறேன்" என்று பேசியுள்ளார். அவரது பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X