Thug Life: “இதெல்லாம் யாருடா கேட்டா.. கமலின் தக் லைஃப் வடிவேலு வெர்ஷன்.." ப்ளூ சட்டை மாறன் பங்கம்
சென்னை: கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் உருவாகவுள்ளது. கமலின் 234வது படமான தக் லைஃப் ஷூட்டிங் அடுத்தாண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தக் லைஃப் டீசரை வடிவேலு வெர்ஷனில் வெளியிட்டு செம்ம பங்கம் செய்துள்ளார் ப்ளூ சட்டை மாறன்.
தக் லைஃப் வடிவேலு வெர்ஷன்
கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்து வருகிறார். கடந்தாண்டு வெளியான விக்ரம் திரைப்படம் கமலுக்கு தரமான கம்பேக் கொடுத்தது. அதன்பின்னரே இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார் ஷங்கர். அதேபோல், பிரபாஸின் கல்கி படத்திலும் வில்லனாக நடித்து வருகிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.

இதனிடையே கமலின் 234வது படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளதாக கடந்தாண்டே அறிவிப்பு வெளியானது. அதன் அடுத்த அப்டேட் இந்தாண்டு கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. அதன்படி, இந்தப் படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கெளதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். மேலும் இந்தப் படத்திற்கு தக் லைஃப் என்ற டைட்டிலும் உறுதியானது.
நாயகன் வெளியாகி 36 ஆண்டுகளுக்குப் பின்னர் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணி தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளது. கமல் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான தக் லைஃப் டைட்டில் டீசர் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது. அதேநேரம் இதில் இடம்பெற்ற ஜாதி பெயரும் கடும் சர்ச்சையானது. "என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன்... காயல்பட்டணம் காரன்... பெறக்கும் போதே என் தலைல எழுதி வச்சிட்டாக... சக்திவேல் நாயக்கன் கிரிமினல்... யாக்கூஸா.., யாக்கூஸானா ஜப்பான் மொழில கேங்ஸ்டர்னு சொன்னாவ.." என கமல் பேசியிருந்தார்.
இந்த டைட்டில் டீசர் வெளியான போதே வெரைட்டி வெரைட்டியாக ட்ரோல் செய்து வந்தார் ப்ளூ சட்டை மாறன். இப்போது இன்னும் ஒருபடி மேலே சென்று பங்கம் செய்துள்ளார். அதாவது கமலின் தக் லைஃப் டைட்டில் டீசரை வடிவேலு வெர்ஷனோடு ஷேர் செய்துள்ளார். அதில், கமல் தனது கேரக்டர் பற்றிய லீட் கொடுத்து முடித்ததும்... "இதெல்லாம் யார்டா உன்கிட்ட கேட்டா... யார்டா நீ" வடிவேலுவின் வீடியோவை வைத்து ட்ரோல் செய்துள்ளார்.
இந்த வீடியோவில் கமல் லீட் கொடுத்ததும் வடிவேலு காமெடி வருவது பக்காவாக பொருந்தியுள்ளது. ப்ளூ சட்டை மாறன் ஷேர் செய்துள்ள இந்த வீடியோவை ரசிகர்களும் வைரலாக்கி வருகின்றனர். இந்நிலையில் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு ஜூலை மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தப் படம் 2025 பொங்கலுக்கு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











