Thug Life Box Office: 300 கோடி பட்ஜெட்டில் உருவான தக் லைஃப்.. முதல் நாள் வசூல் எத்தனை கோடி வரும்?
சென்னை: அமரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு அந்த பணத்தை அப்படியே எடுத்து தக் லைஃப் படத்துக்காக கமல் செலவு செய்து எடுத்துள்ள படமாகவே தக் லைஃப் திரைப்படம் தெரிகிறது. சமீபத்தில் கர்நாடகா நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தக் லைஃப் படத்தின் மொத்த பட்ஜெட் 300 கோடி என தெரிய வந்ததும் ரசிகர்கள் ஷாக் ஆகிவிட்டனர்.
300 கோடி பட்ஜெட்டில் பொன்னியின் செல்வன் படத்தை போல பிரமாண்டமாக கமல்ஹாசனை வைத்து மணிரத்னம் எடுத்து வைத்துள்ளாரா? என்ன மேஜிக் இருக்கப் போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும், 450 கோடிக்கும் அதிகமான வசூல் செய்தால் தான் இந்த அளவுக்கு பணம் போட்டு படமெடுத்ததற்கு லாபத்தை பார்க்க முடியும் என்கின்றனர். கடைசியாக தமிழில் விஜய்யின் கோட் படம் தான் இப்படியொரு வசூல் சாதனையை நிகழ்த்தியது. கமல்ஹாசனின் விக்ரம் படமும் 400 கோடிக்கு அதிகமாகவே வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.
கமல்ஹாசன்: பணத்தை பற்றியெல்லாம் பெரிதாக கவலைப்படும் கலைஞன் கமல்ஹாசன் இல்லை என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்றாகவே தெரியும். கர்நாடகாவில் படம் வெளியாகவில்லை என்றால் 15 முதல் 20 கோடி வரை இழப்பு ஏற்படும் என்பதை நன்றாக புரிந்துக் கொண்டாலும், தமிழ் மொழி உணர்வை விட்டுத் தரமாட்டேன் என்பதற்காக கடைசி வரை மன்னிப்புக் கேட்க முடியாது என கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி சொன்ன பிறகும் தெளிவாக மறுத்துவிட்டார். தனது வாழ்நாளில் தான் சம்பாதிக்கும் பணத்தை எல்லாமே அப்படியே சினிமாவுக்காகவே மீண்டும் கொடுக்கும் மகத்தான மனிதர் தான் கமல்ஹாசன்.
தக் லைஃப் படம் எப்படி இருக்கு?: உலகம் முழுவதும் தக் லைஃப் திரைப்படம் பல இடங்களில் இன்று காலையிலேயே வெளியாகி விட்டன. படத்தை பார்த்த பலரும் மணிரத்னம் இயக்கம் மற்றும் கமல்ஹாசன், சிம்பு நடிப்பை பாராட்டி வருகின்றனர். ஆனால், கதை பொறுமையாக நகர்கிறது என்கிற குற்றச்சாட்டையும் வைத்து வருகின்றனர். பொதுவாக மணிரத்னம் படங்கள் என்றாலே ஹாலிவுட் படங்கள் போல பொறுமையாகத்தான் செல்லும். ஆனால், இன்றைய இளைஞர்கள் குட் பேட் அக்லி போல அதிரடி சரவெடி படங்களை தான் தியேட்டரில் பார்க்க ஆசைப்படுகின்றனர். விக்ரம் படமும் வெறித்தனமாக இருந்த நிலையில், வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
தக் லைஃப் முதல் நாள் வசூல் கணிப்பு: ராஜ்கமல் நிறுவனம் 300 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ் நடித்த தக் லைஃப் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே முதல் நாளில் 20 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் வெளியாகும் தக் லைஃப் திரைப்படம் 2.5 கோடி வரை முதல் நாளில் வசூல் கொடுக்கும் என கணிக்கப்படுகிறது. ஓவர்சீஸில் 10 கோடிக்கும் அதிகமான வசூல் வரும் என்றும் ஒட்டுமொத்தமாக முதல் நாளில் 40 கோடி ரூபாய் வசூல் வரும் என பாக்ஸ் ஆபீஸ் டிராக்கரான சினி டிஸ்கோ பதிவிட்டுள்ளது. 50 முதல் 60 கோடி வரை முதல் நாள் வசூல் வந்தால் தான் பெரிய லாபத்தை பார்க்க முடியும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











