Thug Life Box Office: ஞாயிற்றுக்கிழமையாவது ‘தக் லைஃப்’ படத்துக்கு வசூல் அதிகரித்ததா?.. இதுவரை எவ்வளவு?

சென்னை: ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்க மணிரத்னம் இயக்க கமல்ஹாசன், சிம்பு, அபிராமி, த்ரிஷா, நாசர், அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், சின்னி ஜெயந்த், சஞ்சனா மற்றும் ஒரு பாடலுக்கு சானியா மல்கோத்ரா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் கடந்த வியாழக்கிழமை வெளியானது.

நல்ல சினிமாவை விற்க வந்திருக்கிறேன் என கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே மிகப்பெரிய அளவில் தனது தக் லைஃப் படத்தை புரமோட் செய்தார். ஆனால், முதல் நாள் படம் வெளியானதும் தியேட்டருக்குச் சென்று பார்த்த ரசிகர்களுக்கு தக் லைஃப் படம் பெரிதளவில் கனெக்ட் ஆகவில்லை.

Thug Life Day 4 Box Office Collection also very dull and there is no hope for rise
Photo Credit:

கணிக்கக் கூடிய கதையாக எந்தவொரு ட்விஸ்ட் அண்ட் டர்ன் மற்றும் சுவாரஸ்யம் ஏதுமில்லாமல் ஒரே ஃபிளாட்டாக கதை சென்று கிளைமேக்ஸ் வரை எந்தவொரு முன்னேற்றமோ ஹை பாயின்ட்டோ, கூஸ்பம்ப்ஸ் தரக்கூடிய காட்சிகளோ இல்லாமல் இருந்த நிலையில், படத்தை பார்த்த பலரும் இது மணிரத்னத்தின் மாஸ்டர் பீஸ் இல்லை என்றும் வேஸ்ட் ஃபீஸ் என்றும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்து விட்டனர். அதன் எதிரொலி பாக்ஸ் ஆபீஸிலும் அதிகமாகவே தெரிகிறது.

கடுப்பான சிம்பு ஃபேன்ஸ்: கமல்ஹாசன் மற்றும் சிம்புவுக்கு இருக்கும் ரசிகர்களே இந்த படத்தை பெரிதும் ஓட வைத்து விடுவார்கள் என எதிர்பார்த்தால், சிம்புவுக்கு கிளைமேக்ஸில் நடக்கும் அந்தவொரு விஷயம் காரணமாக சிம்பு ரசிகர்களே கடுப்பாகி விட்டனர். இயக்குநர் மணிரத்னம் செக்கச் சிவந்த வானம் படத்தில் நம் தலைவனை பயன்படுத்தியது போலவே இங்கேயும் பயன்படுத்தி வீணடித்து விட்டார் என்று அதிருப்தியை வெளிப்படுத்த படத்தை தொடர்ந்து தியேட்டர்களில் ஓட வைக்க அவர்களும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

4வது நாள் வசூல் எப்படி?: தக் லைஃப் திரைப்படம் முதல் நாளில் அதிகப்படியாக இந்தியளவில் 18 கோடி வரை வசூல் செய்ததாக sacknilk இணையதளம் தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் அப்டேட் பண்ண நிலையில், முதல் நாள் வசூல் வெறும் 15.5 கோடி என தெரிவித்துள்ளனர். 2வது நாளான வெள்ளிக்கிழமை வசூல் பாதியாக குறைய வெறும் 7.15 கோடி தான் ஈட்டியது. 3வது நாளான சனிக்கிழமை சற்றே அதிகரித்து 7.75 கோடி வரை வசூல் செய்தது. 4ம் நாளான ஞாயிற்றுக்கிழமை இதுவரை கிடைத்த தகவலின் படி வெறும் 6.50 கோடி தான் வசூல் வந்துள்ளது என்றும் ஒட்டுமொத்தமாக 36.90 கோடி வசூலை தக் லைஃப் திரைப்படம் இந்தியளவில் 4 நாட்களில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால், பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் படி முதல் 4 நாட்களில் இந்தியளவில் 50 கோடி வரை வசூல் வந்துள்ளதாக கூறுகின்றனர். உலகம் முழுவதும் 70 கோடி வரை தக் லைஃப் படத்துக்கு வசூல் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அமைதியான RKFI: பொன்னியின் செல்வன் படத்துக்கு எல்லாம் பாக்ஸ் ஆபீஸ் வசூல் சொல்லப்பட்டது. அமரன் படத்துக்கும் ராஜ்கமல் நிறுவனம் வசூல் அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், தக் லைஃப் படத்துக்கு இதுவரை முதல் நாள் வசூல் முதல் 4 நாட்கள் ஆகியும் எந்தவொரு வசூல் அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடாமல் அமைதி காத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X