Thug Life: சிம்புவுக்கு பதில் துல்கர் சல்மான்... தக் லைஃப் மொமண்ட் கொடுத்த கமல்... திடீர் மாற்றம்!
சென்னை: கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் படத்துக்கு தக் லைஃப் என டைட்டில் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. கமல் பிறந்தநாளை முன்னிட்டு தக் லைஃப் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டது.
இந்தப் படத்தில் கமலுடன் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான் ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் தக் லைஃப் படத்தில் சிம்புவுக்கு பதிலாக தான் துல்கர் சல்மான் நடிப்பதாக சொல்லப்படுகிறது.

சிம்புவுக்குப் பதில் துல்கர் சல்மான்
கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கும் படத்தின் டைட்டில் டீசர் இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது. அதன்படி, கமலின் 234வது படமாக உருவாகும் இதன் டைட்டில் 'தக் லைஃப்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. கேங்ஸ்டர் ஜானர் படமாக உருவாகவுள்ள தக் லைஃப் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கமல், மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் என மெகா கூட்டணியில் இந்தப் படம் உருவாகிறது.
அதேபோல், கமலுடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா மூவரும் தக் லைஃப் படத்தில் நடிக்கவுள்ளனர். இதனால், தக் லைஃப் படத்துக்கு இப்போது முதலே தாறுமாறான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் தக் லைஃப் படத்தில் சிம்புவும் நடிப்பதாக இருந்தது. ஏற்கனவே ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் STR 48 படத்தில் சிம்பு கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் இயக்குநராக தேசிங்கு பெரியசாமி கமிட்டாகியுள்ளார்.
STR 48 ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை என்றாலும், இந்தப் படத்திற்காக சிம்பு படு பிஸியாக உழைத்துக் கொண்டிருக்கிறார். மார்ஷியல் ஆர்ட்ஸ், வெயிட் லாஸ் என மீண்டும் மாநாடு பட வைப்பிற்கு மாறிவிட்டார். அதனால் தான் STR 48 ஷூட்டிங் தாமதமாகி வருவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் STR 48 படப்பிடிப்பு 2024ம் ஆண்டு தான் தொடங்கும் எனவும், 2025ல் ரிலீஸாகும் என்றும் சொல்லப்படுகிறது.
சிம்பு கேரியரில் STR 48 மிக முக்கியமான படமாக இருக்கும் என்பதால், இது முடியும் வரை வேறு படங்களில் கமிட் ஆகாமல் இருந்து வருகிறார். இதனால் தான் தக் லைஃப் படத்தில் அவருக்குப் பதிலாக துல்கர் சல்மானை கமிட் செய்துள்ளார்களாம். கமல், மணிரத்னம் இருவருக்குமே சிம்பு தான் முதல் சாய்ஸ்ஸாக இருந்துள்ளார். ஆனால், சிம்பு தக் லைஃப் படத்தில் கமிட்டானால், STR 48 ஷூட்டிங் சரியாக நடக்காது என்பதால், கமல் ரிஸ்க் எடுக்கவில்லையாம்.
அதுமட்டும் இல்லாமல் சிம்புவை விட துல்கர் சல்மானின் சம்பளம் ரொம்பவே குறைவு என்பதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. STR 48 படத்திற்காக சிம்பு 30 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால், துல்கர் சல்மானின் சம்பளம் அதைவிட பாதி தான் என்பதால், தக் லைஃப் படத்தில் சிம்புவை ஓக்கே செய்யவில்லையாம்.


Click it and Unblock the Notifications











