Thug Life FDFS Celebration: விண்வெளி நாயகா.. ஆண்டவருக்கும் ஆத்மனுக்கும்.. கொண்டாட்ட களமான தியேட்டர்!
சென்னை: தமிழ் நடிகர்கள் படம் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனாலும் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆவதை போல அது இருக்காது. முதல் நாள் முதல் காட்சி தமிழ்நாட்டில் படம் பார்ப்பதற்கு முன்னரே வேறு ஒரு நாட்டிலோ மாநிலத்திலோ படம் பார்த்தாலும் அது தமிழ்நாட்டில் பார்ப்பதற்கு ஈடாகாது. காரணம் தமிழ்நாட்டில் ரசிகர்கள் ஒரு பட வெளியீட்டினை கொண்டாடி வரவேற்பது மற்ற மாநிலங்களிலோ மற்ற நாடுகளிலோ கிடைக்காது.
தலைவா.. கடவுளே.. ஆண்டவரே.. என ஆர்ப்பரித்துக் கொண்டு மூன்று மணிநேர படம் என்றாலும் தியேட்டருக்கு வெளியே ஒரு மணி நேர கொண்டாட்டம், தியேட்டருக்கு உள்ளே மூன்று மணி நேர கொண்டாட்டம் என ரசிகர்களின் எனர்ஜியால் ஒரு படம் திருவிழாவாக மாறிவிடுகிறது. அப்படியான படமாக மாறி நிற்கிறது தக் லைஃப். இந்த படம் எந்தவித சலசலப்பும் இல்லாமல் ரிலீஸ் ஆகியிருந்தால் கூட இந்த அளவிற்கு தமிழ்நாட்டில் ஓப்பனிங் கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை. கன்னட மொழிப் பிரச்சனை வந்த பின்னர், கர்நாடகத்தில் படம் வெளியாகாத நிலை உருவான நிலையில் ரசிகர்களை கடந்து பலரும் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.

ரசிகர்களின் பேராதரவு: கோவையில் ஒரு தியேட்டரில், கமல்ஹாசனுக்கு ஆதரவாக " மன்னிப்பு கேட்க முடியாது. வீ ஸ்டாண்ட் வித் கமல்ஹாசன்" என்ற வாசகம் இடம்பெற்றுள்ள டீ சர்ட் அணிந்து கொண்டு ரசிகர்கள் படம் பார்க்க வந்துள்ளார்கள். அதேபோல், பல தியேட்டர்களில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ரசிகர்கள் ஆரவாரத்தோடு படம் ரிலீஸ் ஆகியுள்ளது. அதேபோல் பல தியேட்டர்களில் கமல்ஹாசன் மற்றும் சிம்புவுக்கென ஸ்பெஷல் வீடியோக்களை தியேட்டர்களில் தியேட்டர் நிர்வாகத்தின் சார்பில் ஸ்க்ரீன் செய்துள்ளார்கள். இது ரசிகர்களை மேலும் உற்சாகமடையச் செய்துள்ளது. இந்த ஸ்பெஷல் வீடியோக்கள் தியேட்டரில் ஸ்கிரீன் செய்யும் போது ரசிகர்கள் தியேட்டரே அதிரும் அளவிற்கு ஆரவாரம் செய்கிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
பிரமாதமான நடிப்பு: படம் பார்த்த ரசிகர்கள் படம் சிறப்பாக இருப்பதாகவும், சிம்புவும் கமல் ஹாசனும் வரும் காட்சிகள் அதற்கேற்ற வசனங்கள் என அனைத்தும் அட்டகாசம் என்கிறார்கள். மேலும் படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பது ஒளிப்பதிவும், பின்னணி இசையும் தான் என்கிறார்கள். மேலும் படத்தில் த்ரிஷாவின் போர்ஷன் சிறப்பாக இருப்பதாகவும், ஜிங்குச்சா பாடலைத் தவிர மீதி பாடல்கள் எல்லாம் பாதியிலேயே ட்ரிம் செய்யப்பட்டு விட்டதாகவும் கூறி வருகிறார்கள்.
திரைக்கதை சொதப்பல்: அதேபோல் ரசிகர்கள் பலரும், படம் விக்ரம் மற்றும் செக்கச் சிவந்த வானம் படத்தின் திரைக்கதைகளை கலந்து எடுத்ததுபோல் உள்ளது. பல காட்சிகள் முன்கூட்டியே ஊகிக்கும் அளவுக்கு உள்ளது. மேலும் திரைக்கதை என படத்தில் மெச்சும் அளவுக்கு எதுவும் இல்லை என கருத்து தெரிவித்து வருகிறார்கள். படத்திற்கு முதல் நாள் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டு உள்ளதால் படக்குழுவினர் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆர்வமாக காத்துக் கொண்டு உள்ளார்கள். மேலும் சிம்பு மற்றும் கமல் ஹாசன் ரசிகர்களுக்கு படம் எந்த அளவிற்கு பிடித்துள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











