Thug Life Review: கல்ட் கிளாசிக்.. கமல்ஹாசன், சிம்பு சும்மா மிரட்டிட்டாங்க.. தக் லைஃப் முதல் விமர்சனம்!
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன் டி.ஆர், ஜோஜு ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி, சான்யா மல்கோத்ரா, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் தக் லைஃப் திரைப்படம் வெளியாகிறது.
விஸ்வரூபம் படத்தின் வெளியீடு சமயத்தில் கமல்ஹாசனுக்கு தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்னை வெடித்தது. தற்போது கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட மாட்டோம் என கன்னட அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என பேசியதற்கு மன்னிப்பு தெரிவித்தால் மட்டுமே படத்தை வெளியிடுவோம் என அறிவித்த நிலையில், மன்னிப்பு கேட்க முடியாது என மநீம தொண்டர்கள் போஸ்டர் அடித்து தங்களது ஆதரவை கமல்ஹாசனுக்கு தெரிவித்து வருகின்றனர். தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிட நீதிமன்றத்திலும் கமல்ஹாசன் வழக்கு ஒன்றை தொடுத்துள்ளார். இந்நிலையில், தக் லைஃப் படத்தின் முதல் விமர்சனம் என உமைர் சந்து போட்டுள்ள விமர்சனம் டிரெண்டாகி வருகிறது.
நாயகன் படத்துக்குப் பிறகு: 1987ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் வெளியானது. ஹாலிவுட்டில் வெளியாகி ஏகப்பட்ட ஆஸ்கர் விருதுகளை அள்ளிய காட் ஃபாதர் படத்தின் இன்ஸ்பிரேஷன் மற்றும் வரதராஜ முதலியாரின் கதையை தழுவி எடுக்கப்பட்ட நாயகன் திரைப்படம் தேசிய விருதுகளை வென்றது. ஆனால், அந்த படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து 36 ஆண்டுகள் பணியாற்றாமல் இருந்த நிலையில், மீண்டும் தக் லைஃப் படத்துக்காக இருவரும் இணைந்துள்ளனர். ரங்கராய சக்திவேல் நாயக்கர் கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள நிலையில், படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
தக் லைஃப் முதல் விமர்சனம்: மும்பையில் தக் லைஃப் படத்தின் இந்தி வெர்ஷன் தணிக்கைச் செய்யப்பட்ட நிலையில், படத்தை பார்த்ததாக சொல்லும் சோஷியல் மீடியா விமர்சகர் உமைர் சந்து, "தக் லைஃப் திரைப்படம் ஒரு கல்ட் கிளாசிக் த்ரில்லர், நடிகர்களின் பர்ஃபார்மன்ஸ்கள் எல்லாமே புல்லரிக்க வைத்துவிடும். கமல்ஹாசன் மற்றும் எஸ்டிஆர் நடிப்பிலும் பவர் பேக்ட் ஆக்ஷன் காட்சிகளிலும் அடிதூள் கிளப்பிட்டாங்க. ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் மணிரத்னத்தின் டெட்லி காம்போ மீண்டும் ரசிகர்களை மிரள விட காத்திருக்கிறது. 5க்கு 3.5 ஸ்டார் ரேட்டிங்" கொடுத்து ட்வீட் போட்டுள்ளார் உமைர் சந்து. பொன்னியின் செல்வன் படத்துக்கு இவர் இதே போல விமர்சனம் கொடுத்த நிலையில், சுஹாசினியே படத்தை எங்க பாஸ் பார்த்தீங்க என கேட்டிருந்தார். நம்ம ஊர் பயில்வான் ரங்கநாதன் போல இவரும் அடிச்சு விடுகிறாரா? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.
ஃப்ரீ புரமோஷன்: ராஜ் கமல் நிறுவனம் சார்பில் கமல்ஹாசன் தயாரித்து நடித்துள்ள தக் லைஃப் படத்துக்கு பிரமாண்ட புரமோஷன்களை பல நகரங்களுக்கும் சென்று செய்ததை தாண்டி தற்போது நடைபெற்று வரும் தக் லைஃப் படத்துக்கு தடை என்கிற விஷயம் தலைப்புச் செய்திகளாக கடந்த சில நாட்களாக மாறி மேலும், ஃப்ரீ புரமோஷனை படத்துக்கு கொடுத்துள்ளதாக கூறுகின்றனர்.
டிக்கெட் புக்கிங் சூப்பர்: விக்ரம் படத்துக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம் ரசிகர்களை ஏமாற்றிய நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி என நடிகர்கள் பட்டாளம் இணைந்துள்ள இந்த படம் நிச்சயம் ஏமாற்றாது என நம்பிக்கையுடன் ரசிகர்கள் டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றனர். ஏ.ஆர். ரஹ்மான் போட்ட அத்தனை பாடல்களுமே ஏற்கனவே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளது படத்துக்கு பெரிய புரமோஷனாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications











