Thug Life: தக் லைஃப் படத்தில் இணைந்த அடுத்த பிரபலம்... ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய மணிரத்னம்!
சென்னை: கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது. இந்நிலையில், இந்தப் படத்தில் மேலும் ஒரு பிரபலம் இணைந்துள்ளாராம்.

தக் லைஃப் படத்தில் இணைந்த பிரபலம்
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களாக வெளியானது. அதனைத் தொடர்ந்து தற்போது உலகநாயகன் கமல்ஹாசனோடு இணைந்துள்ளார் மணிரத்னம். நாயகன் படத்துக்குப் பின்னர் 36 ஆண்டுகள் கழித்து இந்தக் கூட்டணி இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
KH 234 என அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் டைட்டில், தக் லைஃப் என கமல் பிறந்தநாளில் டீசருடன் அறிவிக்கப்பட்டது. இந்த டீசரில், "என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன், நான் ஒரு கேங்ஸ்டர்" என செம்ம மிரட்டலாக மாஸ் காட்டினார் கமல்ஹாசன். இதன்மூலம் தக் லைஃப் கேங்ஸ்டர் ஜானரில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் திரும்பவும் ஜாதி படமா என சர்ச்சையும் கிளம்பியது.
இந்தப் படத்தில் கமலுடன் துல்கர் சல்மான், த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கவுள்ளனர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்நிலையில் தக் லைஃப் படத்தில் இன்னொரு பிரபலமும் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. மணிரத்னம் இயக்கிய கடல் படத்தில் ஹீரோவாக அறிமுகமானவர் கெளதம் கார்த்திக். நடிகர் கார்த்திக்கின் மகனான கெளதம், இன்னும் பெரிய அளவில் சக்சஸ் கொடுக்கவில்லை.
சில படங்களில் ஹீரோவாக நடித்த அவர், கடைசியாக சிம்புவுடன் பத்து தல படத்தில் நடித்திருந்தார். அதேபோல், நடிகை மஞ்சிமா மோகனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சரியான பட வாய்ப்புகள் இல்லாத கெளதம் கார்த்திக்கு, மணிரத்னம் மீண்டும் ஒரு சான்ஸ் கொடுக்க முடிவு செய்துள்ளார். அதன்படி தக் லைஃப் படத்தில் கெளதம் கார்த்தியும் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுபற்றிய அபிஸியல் அப்டேட் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கமல், ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா என மெகா டீம் தக் லைஃப் கொடுக்க காத்திருக்கிறது. இதில் கெளதம் கார்த்தியும் மாஸ் காட்டுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











