Mani Ratnam: மணிரத்னத்திற்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன மாமனார் கமல்ஹாசன்.. என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?

சென்னை: இயக்குநர் மணிரத்னம் இன்று தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு இந்த பிறந்த நாள் மிகவும் ஸ்பெஷல் பிறந்த நாளாக அமைய உள்ளது. காரணம் இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படமான தக் லைஃப் படம் வரும் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இந்நிலையில் தக் லைஃப் படத்தின் நடிகரும் மணிரத்னத்தின் மாமனாருமான கமல்ஹாசன் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் கிட்டத்தட்ட 38 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாகும் படம் தக் லைஃப். இதற்கு முன்னர் இருவரும் நாயகன் படத்தில் இணைந்திருந்தார்கள். அதன் பின்னர் இவர்கள் இருவரும் எப்போது இணைந்து படம் பண்ணுவார்கள் என்று காத்துக் கொண்டு இருந்த இவர்களுக்கு தக் லைஃப் படம் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. படத்தின் டிரைலர் தொடங்கி பாடல்கள் வரை அனைத்துமே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

மணிரத்னம் தமிழ் சினிமாவின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவர். இன்னும் சொல்லப்போனால் அவர் தமிழ் சினிமாவில் மாஸ்டர், தமிழ் சினிமாவின் தக் என்று கூறலாம். மணிரத்னம் எப்போதுமே தமிழ் சினிமாவில் இருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொண்டு, வேறு விதமான படங்களை தமிழில் கொடுக்கும் இயக்குநர். இவரது பல படங்கள் இன்றைக்கும் திரைப்படங்கள் குறித்து படிக்க நினைப்பவர்களுக்கு பாடமாக உள்ளது.

Thug Life Hero KamalHaasan Wishes to Director Maniratnam 69th Birthday

வித்தியாசமான இயக்குநர்: மொத்த இந்திய திரையுலகமும் ராமாயணம் குறித்து மாறி மாறி படங்கள் எடுத்தால் மணிரத்னம் ராவணன் குறித்து படமெடுப்பார். படங்களாக மட்டுமல்லாமல், படத்தில் தனது காட்சிகள் வழியே மணிரத்னம் ரசிகர்களுக்கு கடத்தும் திரைமொழி என்பது மற்ற இந்திய இயக்குநர்களில் இருந்து வித்தியாசமானது. வெற்றி தோல்விகளை ஒருசேர அணுகக் கூடிய ஒரு இயக்குநர் மணிரத்னம். இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களிலும் ரசிகர்களை கொண்டுள்ளார். மணி ரத்னத்தின் திரை மொழியில் இடம் பெறும் காதலும் காமமும் மற்ற இயக்குநர்களின் படங்களை விடவும் தனித்து நிற்பதுடன் உச்சத்தில் இருக்கிறது என்று கூறலாம்.

மாமனார் கமல்ஹாசன்: இன்று தனது 69வது பிறந்த நாளைக் கொண்டாடும் மணிரத்னத்திற்கு நடிகரும் அவரது மாமனாருமான கமல்ஹாசன் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்தில், " இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மணிரத்னம். நாயகனில் இருந்து தக் லைஃப் வரை சினிமாக்காரர்களாக, சினிமாவை கனவாக கொண்டவர்களாக, சினிமாவின் மாணவர்களாக, குடும்ப உறுப்பினர்களாக பயணித்து வந்துள்ளோம்.

Thug Life Hero KamalHaasan Wishes to Director Maniratnam 69th Birthday

வெகு சிலரில்: இந்த ஒவ்வொரு கட்டத்திலும் உங்களின் இருப்பு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சினிமாவில் எனக்கு சந்தேகம் வரும்போது எல்லாம் நான் திரும்பிப் பார்க்கையில் இருக்கும் வெகுசில நபர்களில் நீங்களும் ஒருவர். உங்கள் படங்கள் தொடர்ந்து வெளிவரட்டும், வரவேண்டும். காரணம் உங்களது ஃப்ரேம் சினிமாவிற்கு அர்த்தத்தையும் ஆழத்தையும் கொண்டு வருகிறது. என்றென்றும் உங்கள் நண்பன் கமல்ஹாசன்" என்று பதிவிட்டுள்ளார். மணிரத்னம் கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனின் மகள் சுஹாசினியை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பதால், மணி ரத்னம் கமல்ஹாசனுக்கு மாப்பிள்ளை ஆகிறார். தக் லைஃப் படம் வரும் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. கர்நாடகாவில் படம் வெளியாகுமா என்பது மட்டும் இப்போதும் சந்தேகத்தில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X