Thug Life: கமல் - மணிரத்னம் கூட்டணியில் இணைந்த மாஸ் ஹீரோ... தக் லைஃப் அடிபொலி சம்பவம் லோடிங்!
சென்னை: உலகநாயகன் கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணி தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளது. இந்தப் படத்தின் முதல் அபிஸியல் அப்டேட் 2022ம் ஆண்டு வெளியானது. ஆனாலும் இதுவரை படப்பிடிப்பு தொடங்காத நிலையில், தற்போது ஒரு முக்கியமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் தக் லைஃப் படத்தில் அடிபொலி சம்பவம் கன்ஃபார்ம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
தக் லைஃப் அடிபொலி சம்பவம் லோடிங்
இந்தியன் 2, கல்கி படங்களில் பிஸியாக இருக்கும் கமல், அடுத்து மணிரத்னம் கூட்டணியில் இணைகிறார். நாயகன் படத்துக்குப் பின்னர் மீண்டும் இந்த காம்போ இணைந்துள்ளது ரசிகர்களுக்கு கூஸ்பம்ப் மொமண்ட்டாக அமைந்துள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினியும் கமலும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அப்போதே தக் லைஃப் கூட்டணி உறுதியாகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதனையடுத்து 2022ல் கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக KH 234 டைட்டிலில் அப்டேட் வெளியானது. அதன்பின்னர் 2023 கமல் பிறந்தநாளில் KH 234 டைட்டில் தக் லைஃப் என டீசருடன் அறிவிக்கப்பட்டது. அப்போது முதலே இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு எகிற வைத்துள்ளது. கேங்ஸ்டர் மூவியாக தக் லைஃப் படத்தை ரெட் ஜெயன்ட், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கின்றன. அதேபோல் கமல்ஹாசனுடன் கமல்ஹாசனுடன் துல்கர் சல்மான், த்ரிஷா, ஜெயம் ரவி நடிப்பதும் கன்ஃபார்ம் ஆனது.
மணிரத்னத்தின் ஆல்டைம் ஃபேவரைட் ஏஆர் ரஹ்மான் தக் லைஃப் படத்திற்கு இசையமைக்கிறார். இருப்பினும் தக் லைஃப் ஷூட்டிங் இன்னும் தொடங்காமல் இருந்தது. மேலும், இது இன்னும் தாமதம் ஆகலாம் எனவும் செய்திகள் வெளியாகின. ஆனால், அது உண்மையில்லை என்பதை தற்போது வெளியான அப்டேட்கள் மூலம் புரிந்துகொள்ளலாம். அதாவது தக் லைஃப் படத்தில் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் இணைந்துள்ளதாக படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது.

மலையாளத்தில் தரமான பல படங்கள் கொடுத்துள்ள ஜோஜூ ஜார்ஜ், தமிழில் தனுஷுடன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்திருந்தார். அதன்பின்னர் தற்போது தக் லைஃப் படத்தில் நடிக்கவுள்ளார். அதேபோல், கெளதம் கார்த்திக் நடிக்கவிருப்பதையும் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக கெளதம் கார்த்திக் நடிப்பதாக தகவல்கள் மட்டுமே வெளியாகியிருந்தன. இதன்மூலம் தக் லைஃப் டீம் இன்னும் ஸ்ட்ராங்காக மாறியுள்ளது.
இந்நிலையில், தக் லைஃப் ஷூட்டிங் பொங்கல் விடுமுறை முடிந்ததும் வரும் 18ம் தேதியே தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னையில் உள்ள கல்லூரியில் தக் லைஃப் முதல்கட்ட படப்பிடிப்பை தொடங்கும் மணிரத்னம், அதன் பின்னர் இன்னும் பல லொக்கேஷன்களில் ஷூட் செய்ய முடிவு செய்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











