Thug Life: தக் லைஃப் ஸ்பாட்டில் மாஸ் காட்டிய கமல்... இணையத்தை கலக்கும் கலர்ஃபுல் போட்டோஸ்!
சென்னை: கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ள தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் நேற்று தொடங்கியது. பிரம்மாண்டமான பட்ஜெட்டில் மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் தக் லைஃப், கோலிவுட்டின் அடுத்த இண்டஸ்ட்ரி ஹிட் லிஸ்ட்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தக் லைஃப் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வெளியான புகைப்படங்கள் டிவிட்டரில் வைரலாகி வருகின்றன.
தக் லைஃப் ஸ்பாட்டில் கமல்ஹாசன்
கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான கமல், விக்ரம் வெற்றிக்குப் பின்னர் வெறித்தனமாக கம்பேக் கொடுத்துள்ளார். இதனையடுத்து இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்த கமல், இப்போது மணிரத்னமுடன் இணைந்துள்ளார். நாயகன் வெளியாகி 36 ஆண்டுகளுக்குப் பின்னர் கமல் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கமலின் 234வது படமாக உருவாகும் தக் லைஃப், இந்தாண்டு இறுதி அல்லது அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே இந்தப் படத்திற்காக மியூசிக் கம்போஸிங் வேலைகளை தொடங்கிவிட்டார் ஏஆர் ரஹ்மான். இதனையடுத்து நேற்று தக் லைஃப் படப்பிடிப்பும் தொடங்கியது. பிக் பாஸ் ஸ்டைலில் நாள் ஒன்று என்ற கேப்ஷனுடன் நேற்று தொடங்கிய தக் லைஃப் படப்பிடிப்பில் கமல் பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில், தக் லைஃப் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதில், கமல்ஹாசன், மணிரத்னம் இருவருக்கும் ரெட் ஜெயன்ட் சார்பில் மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. தக் லைஃப் டைட்டில் டீசரில் மீசையுடன் மிரட்டலாக மாஸ் காட்டியிருந்த கமல், தற்போது மீசை இல்லாமல் பங்கேற்றுள்ளார். இதனால் தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் ஒன்றுக்கும் மேற்பட்ட கெட்டப்களில் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல் சென்னையில் உள்ள கல்லூரியில் தான் தக் லைஃப் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்பட்டது. அதன்படி தற்போது வெளியான புகைப்படங்களை பார்க்கும் போது கல்லூரியில் தான் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் தொடர்ந்து ஒரு வாரம் வரை தக் லைஃப் ஷூட்டிங் நடைபெறும் எனவும், அடுத்த ஷெட்யூல் மார்ச் மாதம் தான் என்றும் சொல்லப்படுகிறது.

தக் லைஃப் படத்தில் கமலுடன் ஜெயம் ரவி, துல்கர் சல்மான், த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், கெளதம் கார்த்திக், நாசர், அபிராமி, ஐஸ்வர்யா லெக்ஷ்மி ஆகியோர் நடிக்கவுள்ளனர். இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடி கிடையாது என இயக்குநர் மணிரத்னம் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகின. நாயகன் போல தக் லைஃப் திரைப்படமும் கோலிவுட்டின் கல்ட் கிளாஸிக் கேங்ஸ்டர் மூவியாக இருக்குமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











