Thug Life: தக் லைஃப் மேக்கிங் வீடியோவே இந்த மாதிரியா..? அப்போ மொத்த படமும் வேற லெவல் தான் போல!

சென்னை: கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் தக் லைஃப் திரைப்படம் உருவாகவுள்ளது.

கமலின் 234வது படமான இதன் டைட்டில் டீசர், இரு தினங்களுக்கு முன்னர் வெளியானது.

கமல்ஹாசனின் மிரட்டலான ஆக்‌ஷன் ட்ரீட்டாக உருவான இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், தக் லைஃப் டீசர் மேக்கிங் வீடியோ வெளியாகி, படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

 Thug Life: Kamal Haasans Thug Life making video is trending on Twitter

தக் லைஃப் மேக்கிங் வீடியோ: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடைசியாக விக்ரம் படம் வெளியானது. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்து வருகிறார். அதன் தொடர்ச்சியாக 36 ஆண்டுகளுக்குப் பின்னர் கமல் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. கடந்தாண்டே இதுகுறித்து அறிவிப்பு வெளியானாலும், அதன்பின்னர் எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கும் படம் பற்றிய அப்டேட் வெளியானது. அதன்படி, KH 234 டைட்டில் தக் லைஃப் என டீசருடன் அறிவிக்கப்பட்டது. இந்த டீசரில், "என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன், நான் ஒரு கேங்ஸ்டர்" என செம்ம மிரட்டலாக மாஸ் காட்டினார் கமல்ஹாசன். இதனால் தக் லைஃப் பக்கா கேங்ஸ்டர் படமாக உருவாகவுள்ளது உறுதியாகியுள்ளது.

இந்தப் படத்தில் கமலுடன் துல்கர் சல்மான், த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் கமிட்டாகியுள்ளனர். விக்ரமை தொடர்ந்து தக் லைஃப்-ம் மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகவுள்ளது. இந்நிலையில், தக் லைஃப் டைட்டில் டீசரின் மேக்கிங் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. மணிரத்னம், அன்பறிவ் மாஸ்டர்ஸ் இணைந்து கோரியோகிராபி செய்துள்ள இந்த ஆக்‌ஷன் டீசரில், கேமரா ஒர்க் மிரட்டலாக உள்ளது.

 Thug Life: Kamal Haasans Thug Life making video is trending on Twitter

தக் லைஃப் டீசரையே பார்த்து பார்த்து செதுக்கியுள்ளார் மணிரத்னம். இதனால் மொத்த படமும் இதைவிட செம்ம மாஸ்ஸாக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இன்னொரு பக்கம் தக் லைஃப் டைட்டில் டீசர் மேக்கிங், ஹாலிவுட்டில் இருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அதேபோல், கமல்ஹாசனின் கேரக்டர் பெயரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

அதாவது ரங்கராய சக்திவேல் நாயக்கன் என்பது ஜாதி பெயர் என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. தக் லைஃப் ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்னரே எதிர்பார்ப்புகளும் விமர்சனங்களும் ஒருசேர வந்துள்ள நிலையில், படம் வெளியான பின்னர் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X