Thug Life: திடீர் திடீர்ன்னு கெட்டப் மாத்துறாரே.. தக் லைஃப் கமலின் புது லுக்... ட்ரெண்டாகும் போட்டோ

சென்னை: விக்ரம் வெற்றிக்குப் பின்னர் கமல் அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் கடந்தண்டு கமல் நடிப்பில் எந்த படங்களும் வெளியாகவில்லை. விரைவில் இந்தியன் 2 ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தக் லைஃப் படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார் கமல். மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்திற்காக கமல் புதிய லுக்கில் வலம் வரும் போட்டோ வைரலாகி வருகிறது.

தக் லைஃப் கமலின் புது லுக்
நாயகன் படத்திற்குப் பின்னர் 33 ஆண்டுகள் கடந்து மணிரத்னம் இயக்கத்தில் நடித்து வருகிறார் கமல். அவரது 234வது படமான இதன் டைட்டில் தக் லைஃப் என படக்குழு அறிவித்தது. இதற்காக வெளியான டைட்டில் டீசர் தக் லைஃப் படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இந்த டீசரில் தன்னை கேங்ஸ்டராக இன்ட்ரோ கொடுத்த கமல், ஆக்‌ஷனில் மெர்சல் செய்திருந்தார்.

 Thug Life: Kamal Hassan new look photo from Thug Life is trending

அதேபோல், கமல்ஹாசனின் ஹேர் ஸ்டைல், லுக் ஆகியவையும் ரசிகர்களிடம் அதிக கவனம் ஈர்த்தது. இன்னொரு பக்கம் ஏஆர் ரஹ்மானும் தனது பங்கிற்கு பின்னணி இசையில் மிரட்டியிருந்தார். மேலும் கமலுடன் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

கமலின் விக்ரம், மணிரத்னம் கடைசியாக இயக்கிய பொன்னியின் செல்வன் போல தக் லைஃப் படமும் மல்டி ஸ்டார்ஸ் கூட்டணியில் உருவாகி வருகிறது. கடந்த மாதம் 24ம் தேதி சென்னையில் தொடங்கிய தக் லைஃப் ஷூட்டிங் 5 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சூட்டிங் ஸ்பாட் லொக்கேஷனை ரஷ்யாவுக்கு மாற்றினார் மணிரத்னம். அங்கு நடந்த படப்பிடிப்பில் கமல் பங்கேற்கவில்லை என சொல்லப்படுகிறது.

அவர் தக் லைஃப் படத்திற்காக தனது லுக்கை மாற்ற வேண்டும் என அமெரிக்கா சென்றிருந்தார். அங்கிருந்து அவர் ரஷ்யா செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை திரும்பியுள்ளார். தேர்தல் கூட்டணி தொடர்பான ஆலோசனைக்காக சென்னை வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து சென்னை விமான நிலையத்தில் இருந்து கமல் வெளியேறும் போட்டோ, வீடியோ வைரலாகி வருகிறது.

இதில் தக் லைஃப் படத்திற்காக கமல் எந்த லுக்கில் மாறியுள்ளாரோ, அதே கெட்டப்பில் வந்துள்ளார். முதல் ஷெட்யூலில் மீசை இல்லாமல் நடித்திருந்த கமல், இப்போது விருமாண்டி ஸ்டைலில் லேசான தாடியுடன் சென்னை விமான நிலையத்தில் என்ட்ரி கொடுத்துள்ளார். பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் என இந்த இரண்டு படங்களின் கெட்டப்புகளையும் மிக்ஸ் செய்தால் எப்படி இருக்குமோ, அப்படி இருக்கிறார் கமல்.

இதனை கமல்ஹாசன் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அடுத்த மாதம் செர்பியாவில் தொடங்கும் படப்பிடிப்பில் கமல் கலந்துகொள்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் டெல்லியில் நடைபெறும் தக் லைஃப் படப்பிடிப்பில் கமல், ஜெயம் ரவி, த்ரிஷா உள்ளிட்ட மொத்த நட்சத்திரங்களும் பங்கேற்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி விரைவில் உறுதியான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X