Thug Life: தக் லைஃப் படப்பிடிப்புக்கு பிரேக்... கெட்டப் மாற்றும் கமல்... காத்திருக்கும் மணிரத்னம்!

சென்னை: கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் ஷூட்டிங் கடந்த வாரம் தொடங்கியது. சென்னையில் தொடங்கிய இந்தப் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொண்டார். இந்நிலையில் ஐந்தே நாட்களில் முதல் ஷெட்யூலை முடித்துவிட்ட மணிரத்னம், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செல்ல கமலுக்காக காத்திருக்கிறாராம்.

தக் லைஃப் படப்பிடிப்புக்கு திடீர் பிரேக்
உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். இந்தியன் 2, கல்கி படங்களைத் தொடர்ந்து தக் லைஃபில் கமிட்டானார் கமல். நாயகன் வெளியாகி 36 ஆண்டுகளுக்குப் பின்னர் தக் லைஃப் படம் மூலம் மணிரத்னத்துடன் கமல் மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது. நாயகன் போல தக் லைஃப் படமும் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

 Thug Life: Kamal will join the Thug Life second schedule directly sporting a full beard

ராஜ்கமல் ஃபிலிம்ஸ், ரெட் ஜெயன்ட், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகும் தக் லைஃப், கண்டிப்பாக கோலிவுட்டின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமலுடன் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் தக் லைஃப் படப்பிடிப்பு கடந்த வாரம் 24ம் தேதி சென்னையில் தொடங்கியது. இதில் கமல்ஹாசனுடன் ஜோஜூ ஜார்ஜ், அபிராமி ஆகியோரும் பங்கேற்றதாக சொல்லப்படுகிறது. தக் லைஃப் ஷூட்டிங்கில் கமல் பங்கேற்ற போட்டோவும் வெளியாகியிருந்தது. அதில் மீசை, தாடி இல்லாமல் சூப்பரான லுக்கில் மாஸ் காட்டினார் கமல். அதேநேரம் 5 நாட்கள் மட்டுமே நடைபெற்ற தக் லைஃப் படப்பிடிப்புக்கு திடீரென பிரேக் விடப்பட்டுள்ளது.

இந்த ஐந்து நாட்களும் கமலின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் ஷூட் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் கமல், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோரின் ரெட்ரோ லுக் செம்மையாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தக் லைஃப் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கமல்ஹாசன் ரெடியான பின்னரே இந்தப் படப்பிடிப்பை தொடங்க மணிரத்னம் முடிவு செய்துள்ளாராம்.

அதாவது அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு கமல் மீசை, தாடியுடன் ரங்கட் பாய்ஸ் லுக்கில் மாறவிருக்கிறாராம். அதனால் அதுவரை தக் லைஃப் படப்பிடிப்புக்கு பிரேக் விட்டுள்ளாராம் மணிரத்னம். அதன்படி இரண்டாவது ஷெட்யூல் ஷூட்டிங் மார்ச் மாதம் தொடங்கும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே KH 237 படத்தின் ப்ரீ புரொடக்‌ஷன் வேலைகள் குறித்தும் கமல் அதிகம் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X