Thug Life: தொடங்கியது தக் லைஃப் ஷூட்டிங்..? கமலுக்கு மணிரத்னம் கொடுத்த ஷாக்கிங் சர்ப்ரைஸ்!

சென்னை: கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் பட ஷூட்டிங் இன்று தொடங்கியதாக சொல்லப்படுகிறது. சென்னையில் தொடங்கிய இப்படப்பிடிப்பில் கமல் இணைந்துள்ள நிலையில், மேலும் சிலரும் பங்கேற்க உள்ளதாக தெரிகிறது. இதனிடையே இயக்குநர் மணிரத்னம் எடுத்துள்ள முடிவால் தக் லைஃப் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தொடங்கியது தக் லைஃப் ஷூட்டிங்
கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2, கல்கி படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இந்தியன் 2 படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து தற்போது தக் லைஃப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் கமல்ஹாசன். மணிரத்னம் இயக்கும் இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் 2022ம் ஆண்டே வெளியானது. ஆனாலும், இதுவரை படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது.

 Thug Life: Kamals Thug Life Shooting Start From Chennai Total 5 Days Schedule Plan First

இந்நிலையில் கடந்தாண்டு கமல்ஹாசன் பிறந்தநாளின் போது படத்தின் டைட்டில் தக் லைஃப் என படக்குழு அறிவித்தது. இந்தப் படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஜோஜூ ஜார்ஜ், கெளதம் கார்த்திக் ஆகியோரும் கமல்ஹாசனுடன் நடிக்கவுள்ளனர். ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் இன்று சென்னையில் தொடங்கியுள்ளதாம்.

இந்தியன் 2, கல்கி, பிக் பாஸ் ஷூட்டிங் முடிந்துவிட்டதால், தக் லைஃப் படத்திற்காக தனது கால்ஷீட்டை கொடுத்துள்ளார் கமல். அதனால் இன்று தக் லைஃப் படப்பிடிப்பை தொடங்கிய மணிரத்னம், முதல் ஷெட்யூலில் 5 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் நடத்தவுள்ளாராம். இதிலும் கமலின் போர்ஷன் மட்டும் ஷூட் செய்யப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்பின்னர் தக் லைஃப் படப்பிடிப்புக்கு பிரேக் விடப்பட்டு மார்ச் மாதம் தான் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் மாதம் தொடங்கும் இரண்டாவது ஷெட்யூலில் முக்கியமான காட்சிகளை படமாக்க மணிரத்னம் பிளான் செய்துள்ளாராம். இதனால் மார்ச் மாதம் ஷெட்யூலில் கமலுடன் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நாயகனுக்குப் பின்னர் கமலுடன் இணைந்துள்ள மணிரத்னம், தக் லைஃப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்துள்ளாராம்.

இத்தனை ஆண்டுகளில் மணிரத்னத்தின் ட்ரீம் ப்ராஜெக்ட்டாக இருந்த தக் லைஃப், இப்போது படப்பிடிப்பு வரை வந்துவிட்டது. இதனால் இந்தப் படத்தின் ஸ்கிரிப்ட்டை பார்த்து பார்த்து செதுக்கியுள்ளாராம். அதேபோல், கமல்ஹாசனும் விக்ரம் படத்துக்குப் பின்னர் தக் லைஃப் பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் மூவியாக இருக்கும் என நம்பிக்கையுடன் நடித்து வருகிறார். தக் லைஃப் இந்தாண்டு தீபாவளி அல்லது டிசம்பர் மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X