Thug Life: “நாள் ஒன்று... பிக் பாஸ் ஸ்டைலில் கமலின் தக் லைஃப் அப்டேட்..” வெளியானது அடுத்த ப்ரோமோ!

சென்னை: கமல்ஹாசனின் தக் லைஃப் படத்துக்கு ரசிகர்களிடம் நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் கேங்ஸ்டர் ஜானரில் உருவாகும் தக் லைஃப், இந்தாண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை படப்பிடிப்பு தொடங்காமல் இருந்த நிலையில், தற்போது பிக் பாஸ் ஸ்டைலில் தரமான அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு.

பிக் பாஸ் ஸ்டைலில் தக் லைஃப்
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து பிரமமாண்டமான படங்கள் உருவாகி வருகின்றன. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் மெகா கூட்டணியில் கமல் இணைந்து வருகிறார். அதன்படி பாதியிலேயே ட்ராப் ஆன இந்தியன் 2 தற்போது இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. அதேபோல் பிரபாஸின் கல்கி படத்திலும் கமல் வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 Thug Life: Kamals Thug Life Shooting Starts From Today at Chennai

இன்னொரு பக்கம் தனது 234வது படத்திற்காக இயக்குநர் மணிரத்னம் உடன் இணைந்தார் கமல். இந்தப் படத்தின் டைட்டில் தக் லைஃப் என படக்குழு சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதேபோல் கமலுடன் ஜெயம் ரவி, த்ரிஷா, துல்கர் சல்மான், நாசர், அபிராமி, கெளதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி ஆகியோர் நடிப்பதும் உறுதியாகிவிட்டது. டெக்னிக்கலாக ஏஆர் ரஹ்மான், அன்பறிவ் மாஸ்டர்ஸ், ஸ்ரீகர் பிரசாந்த் ஆகியோரும் தக் லைஃப் படத்தில் இணைந்துள்ளனர்.

இதனால் இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் பற்றி படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது. அதன்படி, இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்று முதல் சென்னையில் தொடங்கியுள்ளதாம். நாள் ஒன்று என பிக் பாஸ் ஸ்டைலில் ப்ரோமோவுடன் அப்டேட் கொடுத்துள்ளது படக்குழு. இதனால் கமல் ரசிகர்கள் செம்ம உற்சாகத்தில் உள்ளனர்.

 Thug Life: Kamals Thug Life Shooting Starts From Today at Chennai

இன்று தொடங்கிய தக் லைஃப் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. இந்தியன் 2, பிக் பாஸ் படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் முழுக்க முழுக்க தக் லைஃப் படத்தில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறாராம் கமல். இதனால் தக் லைஃப் படப்பிடிப்பை அசுர வேகத்தில் நடத்தி முடிக்க முடிவு செய்துள்ளாராம் மணிரத்னம். சென்னையை தொடர்ந்து வெளிநாடுகளிலும் தக் லைஃப் ஷூட்டிங் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

மணிரத்னத்தின் ட்ரீம் ப்ராஜெக்ட்டான தக் லைஃப், கோலிவுட்டின் அடுத்த இண்டஸ்ட்ரி ஹிட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாயகன் படத்துக்குப் பின்னர் கமல் - மணிரத்னம் கூட்டணி மீண்டும் தக் லைஃப் படத்தில் தான் இணைந்துள்ளது. இதுவே இந்தப் படத்திற்கு இந்தளவிற்கு எதிர்பார்ப்பு எழ காரணம் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X