Thug Life: KH 234 ஒரிஜினல் டைட்டில் தக் லைஃப் இல்லை... மணிரத்னம் சாய்ஸ்க்கு நோ சொன்னாரா கமல்?
சென்னை: கமல்ஹாசனின் 234வது திரைப்படத்தை மணிரத்னம் இயக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் டைட்டில் 'தக் லைஃப்' என மிரட்டலான டீசருடன் வெளியிட்டது படக்குழு.

இதனை கமல்ஹாசன் ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், தக் லைஃப் டைட்டில் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி, இந்தப் படத்துக்கு மணிரத்னம் தேர்வு செய்தது வேறொரு டைட்டில் எனவும், அதற்கு கமல் நோ சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.
தக் லைஃப் ஒரிஜினல் டைட்டில் இதுதானா?
கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணி 36 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் இணைந்துள்ளது. கமலின் 234வது படமாக உருவாகும் இதன் டைட்டில் தக் லைஃப் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. மிரட்டலான டீசருடன் வெளியான இந்த அப்டேட், கமல்ஹாசன் ரசிகர்களுக்கு செம்ம வைப் கொடுத்துள்ளது.
இந்தப் படத்தில் கமலுடன் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி ஆகியோர் லீட் ரோலில் நடிக்கவுள்ளனர். டைட்டில் டீசருடன் தக் லைஃப் டீம் குறித்தும் படக்குழு அபிஸியலாக அறிவித்துள்ளது. முன்னதாக KH 234 நாயகன் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகலாம் என செய்திகள் வெளியாகின. ஆனால், தக் லைஃப் என வித்தியாசமான டைட்டில் கொடுத்து படம் பற்றி எதிர்பார்க்க வைத்துள்ளனர்.
அதேநேரம் கமல் கேரக்டரின் பெயர், ரங்கராய சக்திவேல் நாயக்கன் என அறிமுகம் செய்துள்ளது கவனம் ஈர்த்துள்ளது. சக்திவேல் என்பது தேவர் மகன் படத்தில் கமல்ஹாசன் கேரக்டர் என்பதும், நாயக்கன் என்பதில் நாயகன் படத்தின் வேலு நாயக்கர் கேரக்டரின் டச் இருப்பதையும் பார்க்க முடிகிறது. அதுமட்டும் இல்லாமல் இது கேங்ஸ்டர் படம் என்பதையும் டீசரிலேயே அறிவித்துவிட்டார் மணிரத்னம்.
கமல்ஹாசன் நெல்லை வட்டார வழக்கில் பேசுவதை பார்க்கும் போது, நாயகன் அல்லது தேவர் மகன் படத்தின் அப்டேட் வெர்ஷனாக இருக்கும் எனவும் எதிர்பார்க்க வைத்துள்ளது. இந்நிலையில், தக் லைஃப் என்ற டைட்டிலுக்குப் பதிலாக மணிரத்னம் முதலில் வேறொரு தலைப்பை தேர்வு செய்து வைத்திருந்தாராம். அது சக்திவேல் என்ற டைட்டில் எனவும், அதனை வைக்க கமல் நோ சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இன்றுவரையும் தேவர் மகன் படம் தொடர்பாக பல சர்ச்சைகளும் விவாதங்களும் எழுந்து வருகின்றன. மாரி செல்வராஜ் கூட அவர் இயக்கிய மாமன்னன் தேவர் மகன் படத்தின் நீட்சி எனக் கூறியிருந்தார். மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் தேவர் மகன் படம் குறித்து மாரி செல்வராஜ் பேசியதும் வைரலானது. இதுபோன்ற காரணங்களால் தான் தக் லைஃப் படத்துக்கு சக்திவேல் என்ற டைட்டில் வேண்டாம் என கமல் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











