தக் லைஃப் படத்திற்கு தேதி குறிச்சாச்சு.. ஆடியோ லாஞ்ச் எப்போ தெரியுமா.. விசில் பறக்க போகுது

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் முதல் பாடல் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலை வெளியிட திரை பிரபலங்கள் பலரும் கூடியுள்ளனர். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியிருக்கும் இப்படத்தை திரையில் காண சினிமா ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியிருக்கிறது.

நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம், கமல் காம்போவில் உருவாகும் படம் தக் லைஃப். இப்படம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது. மேலும், இப்படத்தில் முன்னதாக துல்கர் சல்மான், ரவி மோகன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர், கால் ஷீட் பிரச்னையால் இருவரும் இப்படத்தில் விலகினர். இதைத்தொடர்ந்து இப்படத்தில் சிம்பு நடிக்க கமிட் ஆனார். மேலும், இப்படத்தில் சிம்பு ,த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். மேலும், தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

thug-life-movie-audio-launch-date-announce

முதல் பாடல்: தக் லைஃப் படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமா கடந்த மாதம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் நேற்று முன்தினம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்து படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டது அதில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் விரைவில் தெரிவிக்கப்படும் என குறிப்பிட்டிருந்தது. அதன்படி இன்று காலை ஜிங்குச்சா என்ற பாடல் வெளியிடவுள்ளனர். இந்த நிகழ்வில், கமல்ஹாசன், சிம்பு, மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

கமல் படத்தில் சிம்பு வந்தது எப்படி? : இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வில், கமல்ஹாசனும் சிம்புவும் ஒரே மேடையில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது சிம்பு, நான் எந்தமாதிரி படங்களில் நடிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள் என கமலிடம் கேட்பார். அதற்கு தக் லைஃப் தரும் வகையில் கமல்ஹாசன் பதில் அளித்திருப்பார், அதாவது, முதலில் நீங்கள் மென்மேலும் நிறைய படங்களில் நடிக்க வேண்டும். அதற்கு முன்பு என்னுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என சூசகமாக தக் லைஃப் படத்தில் நடிக்க கமல் சிம்புவிடம் கேட்டிருப்பார். தற்போது இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. இதனை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும், சிம்பு படங்கள் எப்போதும் சர்ச்சைகாளவே நீடித்து வருகிறது. சர்ச்சை இல்லாமல் வெளியான படங்கள் என்றால் அது தக் லைஃப் தான் என விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

thug-life-movie-audio-launch-date-announce

ஆடியோ ரிலீஸ் எப்போது?: தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதி வெளியான நிலையில், அப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ஜிங்குச்சா பாடல் இன்று பிற்பகல் வெளியாகிறது. இதனிடையே படத்தின் ஆடியோ ரிலீஸ் எப்போது என்ற தேதியையும் படக்குழு இன்று அறிவித்துள்ளது. ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்த அந்த கொண்டாட்டமான நாள் மே 16ஆம் தேதி என அறிவித்துள்ளனர். ஜிங்குச்சா படல் வெளியீட்டின் போது தெரிவித்திருக்கின்றனர். மே 16ஆம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் தக் லைஃப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான முறையில் நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தக் லைஃப் படத்தில் இன்னும் இதுபோன்ற சுவாரஸ்யமான சம்பவங்களும் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மரில் ரசிகர்கள் கொண்டாட்ட நாளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X