மன்னிப்பு கேட்கமாட்டேன்.. கெத்தா சொன்ன கமல்.. தக் லைஃப் கர்நாடகாவில் தடை.. நஷ்டம் எத்தனை கோடி?
சென்னை: இயக்குநர் மணிரத்னம், கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் தக் லைஃப். இப்படத்தில் சிலம்பரசன், அபிராமி, த்ரிஷா, ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் ஜூன் 5-ம்தேதி உலகளவில் திரையரங்குகளில் வெளியாக நிலையில், தமிழிலிருந்து பிறந்ததுதான் கன்னடம் என பேசி இருந்தார். இது பெரும் சர்ச்சையான நிலையில், கமல் மன்னிப்பு கேட்க மாட்டேன் கூறிய நிலையில், கர்நாடாகவில் தக் லைஃப் படத்தை வெளியிட அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது.
தக் லைஃப் திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி கடந்த 24-ம் தேதி சென்னையில் நடந்தது. இதில் பேசிய கமல்ஹாசன், "தமிழில் இருந்து கன்னடம் பிறந்ததாக" கூறினார். நடிகா் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து, கர்நாடகத்தில் அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்தன. நடிகர் கமலஹாசனுக்கு கர்நாடக முதல்வர் சித்தராமைய்யாவும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். கன்னட மொழி குறித்து தெரிவித்த கருத்துக்கு 24 மணி நேரத்துக்குள் மன்னிப்பு கேட்க நடிகர் கமல்ஹாசனுக்கு கர்நாடக திரைப்பட வர்த்தக சபை கெடு விதித்தது. மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கமல் நடித்துள்ள தக் லைஃப் படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்கமாட்டோம் எனவும் எச்சரிக்கை விடுத்திருந்தது.

தக் லைஃப்: கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான சிவராஜ்குமார், இது குறித்து விளக்கம் அளித்தார். அதில், . கன்னடம் மீது நடிகர் கமல்ஹாசனுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. பெங்களூரு குறித்து அவர் நல்ல விஷயங்களை சொல்கிறார். நான் கமல்ஹாசனின் மிகப்பெரிய ரசிகன். மொழி குறித்து செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். கன்னடம் மொழி மீது குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே அன்பு இருக்கக்கூடாது. இது போன்ற சம்பவங்கள் நடக்கும போது, மட்டும் மொழி பற்றை வெளிப்படுத்தக்கூடாது. கமலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்துள்ளீர்கள்? என கமலுக்கு ஆதரவாக பேசி இருந்தார்.
நஷ்டம்: இதையடுத்து, கன்னட மொழி சர்ச்சை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், இது ஒரு ஜனநாயக நாடு. நான் சட்டத்தை நீதியை நம்புகிறவன். அன்பு தான் ஜெயிக்கும் என்பதை எப்போதும் நம்பக்கூடியவன் நான். இது போல பல மிரட்டல்களை நான் பார்த்து இருக்கிறேன். தவறு இருந்தால் மட்டுமே மன்னிப்பு கேட்பேன் இல்லையெனில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என கமல்ஹாசன் திட்டவட்டமாக கூறிய நிலையில், கர்நாடகாவில் தக் லைஃப் படத்தை வெளியிட அம்மாநில திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ், உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என மூன்று நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ள நிலையில், தக் லைப் படத்தை கர்நாடகத்தில் வெளியிட மாட்டோம் என கர்நாடக வர்த்தக சபை கூட்டத்தில் அறிவித்து இருப்பதாகல், படம் அங்கு வெளியாகாத இலையில் 20 கோடி முதல் 25 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது. தக் லைப் திரைப்படத்தின் கர்நாடக உரிமை 20 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











