கமல் ஹாசனின் பிறந்தநாள்.. தக் லைஃபிலிருந்து வரும் அப்டேட்.. வெளியானது அறிவிப்பு

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் இப்போது நடித்துவரும் படம் தக் லைஃப். கமலுடன் சிம்பு, திரிஷா, விருமாண்டி அபிராமி உள்ளிட்டோர் நடித்துவருகிறார்கள். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கமல் - மணிரத்னம் பல வருடங்கள் கழித்து இணைந்திருப்பதன் காரணமாக இப்படத்தின் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக எகிறியிருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தக் லைஃப் படத்தை முடித்துவிட்டு ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் கமல்.

அரசியலில் கவனம் செலுத்திய கமல் ஹாசன் இப்போது சினிமாவிலும் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். அதன்படி விக்ரம் படத்துக்கு பிறகு இந்தியன் 2 படத்தில் நடித்திருந்தார். ஷங்கர் இயக்கிய அந்தப் படத்தை லைகா தயாரிக்க, அனிருத் இசையமைத்திருந்தார். கமலுடன் சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், நண்டு ஜெகன், பாபி சிம்ஹா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது.

kamal haasan thug life

இந்தியன் 2 படுதோல்வி: தோல்வி என்பதை மட்டும் தாண்டி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்தது இந்தியன் 2. கமல் நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் அநியாயத்துக்கு ட்ரோலானது என்பது குறிப்பிடத்தக்கது. பழைய சீன்கள், தேறாத இசை, கனெக்ட் ஆகாத வசனங்கள் என ஏகப்பட்ட குறைகள் படத்தில் இருந்ததாக ரசிகர்கள் ரொம்பவே நொந்துகொக்ண்டனர். இதற்கிடையே கமல் ஹாசன் மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடிக்க கமிட்டானார்.

தக் லைஃப் கூட்டணி: கமலும், மணிரத்னமும் இணைந்து ஏற்கனவே நாயகன் என்ற கல்ட் க்ளாசிக் படத்தை கொடுத்திருக்கிறார்கள். இன்றுவரை அந்தப் படம் இந்திய சினிமாவில் பலருக்கும் பிடித்த படமாகவும், இன்ஸ்பிரேஷனாகவும் இருக்கிறது. இப்போது இருவரும் மீண்டும் இணைந்திருப்பதன் காரணமாக தக் லைஃப் கல்ட் க்ளாசிக்காக மாறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. மேலும் இந்தியன் 2வுக்கு விழுந்த மரண அடியிலிருந்து மீள்வதற்கு தக் லைஃப் படத்தை கமல் பயன்படுத்திக்கொள்வார் என்று அவரது ரசிகர்கள் கூறுகிறார்கள்.

நம்பிக்கையில் ரசிகர்கள்: தக் லைஃப் படத்தின் இன்னொரு ஹைலைட்டாக இருக்கிறார் சிம்பு. செக்க சிவந்த வானம் படத்தில் ஒர்க் செய்த போது சிம்புவை ரொம்பவே மணிரத்னத்துக்கு பிடித்துவிட்டதால் இந்தப் படத்தில் அவருடன் வேலை செய்கிறார். சிம்புவின் கேரக்டர் தொடர்பான வீடியோ ஒன்று சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பட்டையை கிளப்பியது. நிச்சயம் இதில் சிம்பு மிகப்பெரிய ரோல் செய்திருப்பார் என்று எஸ்டிஆர் ரசிகர்களும் படத்தின் மீது எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். படமானது அடுத்த பொங்கலுக்கு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

அடுத்த அப்டேட்: சூழல் இப்படி இருக்க கமல் ஹாசன் வரும் ஏழாம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். அதனையொட்டி அவரது ரசிகர்கள் இப்போதே தயாராக ஆரம்பித்துவிட்டார்கள். இந்நிலையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு தக் லைஃப் படத்திலிருந்து புதிய அப்டேட் ஒன்று வெளியாகுமென்று படக்குழு அறிவித்திருக்கிறது. அநேகமாக அது படத்தின் ட்ரெய்லராக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ரசிகர்கள் உச்சக்கட்ட ஆர்வமடைந்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X