சிம்பு பிறந்தநாளில் தக் லைப் டீம் வெளியிட்ட கலக்கல் வீடியோ போஸ்டர்.. மாஸ் காட்டும் சிம்பு!

சென்னை: நடிகர் சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில் எஸ்டிஆர் 48 படத்திற்காக அவர் நீண்ட தலை முடி, தாடி என மிகச் சிறப்பாக தயாராகி இருந்தார். ஆனால் இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்படாத நிலையில் தற்போது தன்னுடைய எஸ்டிஆர் 49 படத்தின் அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.

இன்றைய தினம் சிம்புவின் பிறந்த நாளை ஒட்டி அவரது புதிய படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனிடையே தக் லைப் படத்தின் சிம்புவின் வீடியோ கேரக்டரும் தற்போது வெளியாகி உள்ளது. கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனின் மகனாக சிம்பு இணைந்துள்ளார். அவருக்கு ஜோடியாகியுள்ளார் திரிஷா.

simbu simbu birthday thug life movie

நடிகர் சிம்பு அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தாலும் தன்னுடைய எஸ்டிஆர் 48 படத்திற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அவரது நடிப்பில் படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் அவரது ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளான நிலையில் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவரது எஸ்டிஆர் 49 படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனிடையே கமல்ஹாசனுடன் சிம்பு நடித்துள்ள தக்கலைப் படமும் வரும் ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் மணிரத்னம். 34 ஆண்டுகளுக்குப் பிறகு மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் காம்பினேஷனில் உருவாகியுள்ள் இந்த படத்தில் கமல்ஹாசனின் வளர்ப்பு மகனாக சிம்பு நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சிம்புவிற்கு படத்தில் ஜோடி ஆகியுள்ளார் திரிஷா. அபிராமி, நாசர், வையாபுரி உள்ளிட்டவர்களும் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் gangster கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் ரசிகர்களை எவ்வாறு கவரும் என்று அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் சிம்புவின் பிறந்தநாளையொட்டி அவரது கேரக்டர் வீடியோவை பட குழுவினர் பகிர்ந்துள்ளனர். மாஸாக கிளாஸ் ஆக இதில் சிம்புவின் லுக் காணப்படுகிறது.

படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் வெகு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் ப்ரோமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு சிம்பு மற்றும் த்ரிஷாவின் காம்பினேஷன் இந்த படத்தில் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ளவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.

மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களை கடந்து சிம்பு அடுத்ததாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் எஸ் டி ஆர் 48 படத்தில் நடித்த கமிட்டாகி இருந்தார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் உம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. ஆனால் படம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் தற்போது சாக்லேட் படத்தில் நடித்த முடித்துள்ளார் சிம்பு. தனது பிறந்த நாளை ஒட்டி அடுத்த படத்தின் அறிவிப்பையும் மேற்கொண்டு உள்ளார். இந்நிலையில் தேசிங்கு பெரியசாமி உடனான அவரது படம் முடங்குமா அல்லது ஷூட்டிங் துவங்கப்படுமா என்று ரசிகர்களிடையே கேள்வி எழுந்துள்ளது. விரைவில் இதற்கான விடை கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாகவே நடிக்க வந்த நிலையில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் சிறுவனாகவும் இளைஞனாகவும் நடித்துள்ளார். இவரது நடிப்பில் மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்த படங்கள் வெளியாகி மிகச் சிறப்பான வரவேற்பை ரசிகர்கள் இடையே கொடுத்த நிலையில் அடுத்த படம் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாக தாமதம் ஆகி உள்ளது. எஸ்டிஆர் 48 படத்தின் ஷூட்டிங் துவங்கப்படாத நிலையில் தக் லைப் படத்தில் நடித்து முடித்துள்ளார் சிம்பு. இந்நிலையில் இன்றைய தினம் சிம்புவின் பிறந்த நாளை ஒட்டி இந்த படத்தின் சிம்புவின் கேரக்டர் வீடியோ வெளியாகி உள்ளது. சிம்புவின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X