Thug Life Public Review: இனிமேல் நான் தான் ரங்கராய சக்திவேல்.. கமல்ஹாசனை விட சிம்புதான் மாஸ்.. வேற லெவல்
சென்னை: தக் லைஃப் படம் தமிழ்நாட்டில் காலை 9 மணியில் இருந்து தான் திரையிடப்படுகிறது என்றாலும் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இந்திய நேரப்படி அதிகாலையே திரையிட்டு விட்டார்கள். இதனால் வெளிநாடுகளில் படம் பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை இணையதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக படத்தில் கமல்ஹாசனை விட சிம்புவுக்கு அதிகமாகவே மாஸான காட்சிகளும் ஸ்க்ரீன் ஸ்பேஸும் கொடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.
இணைய வாசி ஒருவர், மொத்த படமாக இந்த படம் நன்றாக இருக்கிறது. ஆனால் கமல்ஹாசன் மற்றும் மணிரத்னத்தின் முந்தைய படங்களின் சாயல் நன்றாகவே இருக்கிறது. குறிப்பாக கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் உள்ளிட்ட படங்களின் சாயல் இருக்கிறது. அதேபோல் நடிப்பில் கமல்ஹாசனுடன் போட்டி போட்டு நடித்துள்ளார் சிம்பு.
நாயகன் படத்தில் இருந்து ரங்கராய சக்திவேல் என்ற பெயர் கமல்க்கு சூட்டப்பட்டுள்ளதால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஏற்பட்டது. நாயகன் போல் படம் இல்லை என்பது டிரைலரைப் பார்த்ததுமே தெரிந்து கொண்டோம். ஆனால் அப்பா மகனுக்கு இடையே நடக்கும் அதிகார மோதல் ஸ்க்ரீன்ப்ளே ஏற்கனவே அடித்து துவைத்த ஸ்க்ரீன் ப்ளேவாக உள்ளது. படத்தில் கமல்ஹாசன், சிம்பு எப்படி மாஸாக இருக்கிறார்களோ இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இருவரையும் தூக்கி சாப்பிடும் அளவுக்கு இசையில் பிரமாண்ட படுத்தியுள்ளார் என்று இன்னொரு ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.

மிரட்டி விட்ட சிம்பு: மற்றொருவர் கூறுகையில், " படத்தின் ஒவ்வொரு காட்சியில் இருந்தும் சிம்பு மிரட்டி விட்டுள்ளார். அவரது ஒவ்வொரு ஃப்ரேமும் செதுக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் கமல்ஹாசனை விட சிறப்பாக ஸ்கோர் செய்யும் காட்சிகள் அவருக்கு வைக்கப்பட்டுள்ளது. சிம்பு தனக்கு வழங்கப்பட்டுள்ள கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். படத்தின் இடைவேளை காட்சி முழுக்க முழுக்க புல்லரிக்க வைக்கும் காட்சியாக அமைத்துக் கொடுத்துள்ளார் மணிரத்னம். சிம்புவுக்கு இந்த படம் ஒரு மைல்கல்" என பதிவிட்டுள்ளார்.
இதுதான் மிஸ்ஸிங்: மற்றொரு ரசிகர், " படத்தில் சுவாரஸ்யம் இல்லை. வழக்கமான படங்களைப் போல் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது ஏமாற்றமே. படத்தில் இருக்கும் நட்சத்திரங்கள், இசை, ஒளிப்பதிவைத் தவிர படத்தில் ஈர்க்க கூடியதாக எதுவுமே இல்லை" என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு ரசிகரோ படத்தில் எல்லா பாடல்களும் டிரிம் செய்யப்பட்டுள்ளது. படத்தில் முழுமையாக இடம்பெற்றுள்ள பாடல் என்றால் அது ஜிங்குச்சா பாடல் மட்டும் தான் என தனது ஏமாற்றத்தை பதிவிட்டுள்ளார்.

கலவையான விமர்சனம்: இன்னொரு ரசிகர் கூறும்போது படத்தில் கமல்ஹாசன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அதேபோல் சிம்புவும் அட்டாகசமாகவே பொருந்திப் போகிறார். அப்படி இருக்கும்போது படத்தின் இரண்டாம் பாகம் மிகவும் போர் அடிக்கிறது. மணிரத்னத்தின் சாயல் என சொல்லும் அளவுக்கு இந்த படத்தில் எந்த காட்சியுமே இல்லாதது ஏமாற்றமே" என தெரிவித்துள்ளார். படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தைப் பெற்று வருகிறது. ஆனால் இவை அனைத்தும் தமிழ்நாட்டிற்கு வெளியேதான். அதே நேரத்தில் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு படம் எந்த மாதிரியான அனுபவத்தைக் கொடுத்துள்ளது என்பது இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.


Click it and Unblock the Notifications











