Thug Life Public Review: அவுட் ஆஃப் த பாக்ஸ் சினிமா.. எல்லாமே STR தான்.. பொதுமக்கள் விமர்சனம்!
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, நாசர் வையாபுரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வெளியாகியுள்ள படம் தக் லைஃப். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் மணி ரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளார்கள். ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகி இன்று அதாவது ஜூன் 5ஆம் தேதி வெளியாகியுள்ள இந்த படத்தை தமிழ்நாட்டில் பார்த்த ரசிகர்கள் படம் எப்படி உள்ளது என்பது குறித்து தெரிவித்துள்ளார்கள்.
ரசிகர் ஒருவர் கூறும்போது, " படம் வழக்கமான மணிரத்னம் ஸ்டைல் தான். படத்தின் ஸ்டோரி சொல்வதைப்போல இல்லை. எல்லோருடைய கதாபாத்திரமும் ஒரே மீட்டரில் தான் இருந்தது. ஐஸ்வர்யா லட்சுமி மட்டும் தனித்து தெரிந்தார். டெக்னிக்கலாக மிகவும் அட்டகாசமான படம். எதையும் விளக்க முடியாத அளவுக்குத்தான் படம் உள்ளது. இரண்டாம்பாதி எல்லாம் மிகவும் சுமாராகத்தான் உள்ளது. எல்லாமே யூகிக்கிற அளவுக்குத்தான் உள்ளது. எதுவும் அவுட் ஆஃப் த பாக்ஸாக இல்லை. படம் கிரிப்பிங்காக இல்லை" என்று தெரிவித்துள்ளார்.

சிம்புதான்: மற்றொரு ரசிகர் கூறும்போது, " கமல் மற்றும் சிம்பு என இருவரையும் ஒரே ஃபிரேமில் பார்க்கும் போது நன்றாக இருந்தது. படத்தில் கொஞ்சம் சரிவு உள்ளது, ஆனாலும் படத்தில் கமல் மற்றும் சிம்பு பழி வாங்கிக் கொள்வது எல்லாம் நன்றாக உள்ளது. இசையில் ரகுமான் மிரட்டி விட்டுள்ளார். நாயகன் படத்தில் இருந்து ஒன்லைனை எடுத்து படமாக எடுத்துள்ளதும் நன்றாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார். " இந்த படம் சிம்புவுக்கு மாஸான கம்பேக் படம். திரைக்கதை ஓட்டத்தில் கொஞ்சம் சரிவு இருந்தாலும் படம் மொத்தமாக படம் நன்றாக உள்ளது. ஒரு வழக்கமான கதையை மணிரத்னம் தனது ஸ்டைலில் எடுத்துள்ளார்" என்று ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் ஸ்டைல்: "பழைய கதை, படம் ஸ்லோவாக போகிறது. படத்தில் சண்டைக் காட்சிகள் நன்றாக உள்ளது. சிம்புதான் படம் முழுக்க உள்ளார். அவர்தான் படமே. கமல்ஹாசனுக்கு இணையான கதாபாத்திரம் என்றாலும் சிலம்பரசன் மிரட்டி விட்டார். இன்னும் சொல்லப்போனால் வெறித்தனமாக நடித்துள்ளார். கமலின் நடிப்புக்கு இணையாக தனது நடிப்பும் பேசப்பட வேண்டும் என அவர் மெனக்கெட்டு உள்ளது திரையில் தெரிகிறது. சிம்புவுக்கு உண்மையாகவே இந்த படம் மாஸான கம்பேக் படம்" என ஒரு ரசிகர் தெரிவித்துள்ளார்.

டெக்னிக்கல்: இன்னொரு ரசிகர் கூறும்போது, " சிம்பு மற்றும் த்ரிஷா காம்போவில் ஒரு ட்விஸ்ட் உள்ளது. எல்லா பாடல்களும் நன்றாக உள்ளது. இது மணிரத்னம் படம் என்பதால், அவருக்கென இருக்கக்கூடிய ஸ்டைலில் இந்த படத்தை கொடுத்துள்ளார். எல்லோரும் தங்களது கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு, சண்டைக் காட்சிகள், பிளாஷ்பேக்கில் வரும் கலர் டோன், நடிகர்களுக்கு மேக்-அப் என மொத்த படமும் டெக்னிக்கலாக மிகவும் தரமான படமாக உள்ளது. தியேட்டரில் பார்க்க நல்ல படம். பாடல்கள் மற்றும் இசையில் தனித்து தெரிகிறார் ரகுமான்" என்று கூறியுள்ளார். ரசிகர்கள் மத்தியில் தக் லைஃப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











