Thug Life: “ஆரம்பிக்கலாங்களா..” நியூ இயரில் தக் லைஃப் அப்டேட்... ட்ரெண்டாகும் கமல், மணிரத்னம் போட்டோ
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கவுள்ள திரைப்படம் தக் லைஃப். நாயகனுக்குப் பின்னர் கமல் - மணிரத்னம் கூட்டணி இணையும் தக் லைஃப் படத்துக்கு இப்போது முதலே அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் குறித்து கமல், மணிரத்னம் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட போட்டோ மூலம் அப்டேட் கொடுத்துள்ளனர்.
தக் லைஃப் ஷூட்டிங் அப்டேட்
லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் வெற்றிக்குப் பின்னர் இந்தியன் 2, கல்கி படங்களில் நடித்து வருகிறார் கமல். இன்னொரு பக்கம் இயக்குநர் மணிரத்னம் உடன் தனது 234வது படத்தில் இணைந்துள்ளார். KH 234 என தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் டைட்டில் தக் லைஃப் என அறிவிக்கப்பட்டது. அதனுடன் மிரட்டலான டீசரையும் படக்குழு வெளியிட்டது.

கமலுடன் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கெளதம் கார்த்திக் ஆகியோர் தக் லைஃப் படத்தில் கமிட்டாகியுள்ளார். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பிரம்மாண்டமாக உருவாகும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கவில்லை. இந்தியன் 2, கல்கி படங்கள் முடிந்த பின்னரே தக் லைஃப் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்பட்டது.
இந்நிலையில் புத்தாண்டு தினமான இன்று கமல்ஹாசனும் மணிரத்னமும் இணந்து தக் லைஃப் படப்பிடிப்பு குறித்து அப்டேட் கொடுத்துள்ளனர். அதாவது கமல்ஹாசன், மணிரத்னம் ஆகியோருடன் தயாரிப்பாளர் ஆனந்த் போட்டோ எடுத்துள்ளார். அதில் கமல்ஹாசன் நடுவில் நிற்க, மணிரத்னமும் தயாரிப்பாளர் ஆனந்தும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்தபடி, 'ஆரம்பிக்கலாங்களா’ என கேட்பதை போல உள்ளது. அதற்கு கமல்ஹாசன் ஓக்கே என சொல்வதாக இந்த போட்டோவில் தெரிகிறது.
அதன்படி, தக் லைஃப் ஷூட்டிங் ஜனவரி இறுதியில் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியன் 2, இந்தியன் 3 படப்பிடிப்பை முடித்துவிட்ட கமல்ஹாசன், அடுத்து கல்கி படத்தில் மட்டும் சில போர்ஷன்கள் நடிக்க வேண்டியது உள்ளதாம். அதனால் தக் லைஃப் படப்பிடிப்பையும் ஆரம்பிக்கலாம் என சிக்னல் கொடுத்துவிட்டாராம். இதனையடுத்து தக் லைஃப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கவுள்ளது.
ஜனவரி இறுதியில் தொடங்கும் முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்துவிட்டு, அதன்பின்னர் வெளிநாடு செல்லவிருப்பதாக சொல்லப்படுகிறது. கேங்ஸ்டர் ஜானரில் உருவாகும் தக் லைஃப், பக்கா ஆக்ஷன் மூவியாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் குறுகிய காலத்தில் தக் லைஃப் படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடலாம் என மணிரத்னம் முடிவு செய்துள்ளாராம்.


Click it and Unblock the Notifications











