எல்லோரையும் வைத்துக்கொண்டு.. அய்யோ சிவகார்த்திகேயன் டேஞ்சருங்க.. தக் லைஃப் பாடகி ஓபன் டாக்
சென்னை: சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய்வரை உலகளவில் வசூல் செய்தது. இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்திலும், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் நடித்திருக்கிறார். இரண்டு படங்கள் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவருவது குறிப்பிடத்தக்கது.
சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்த திரையுலகம் ஆச்சரியத்தில்தான் இருக்கிறது. அதேசமயம் அவர் உழைப்பால்தான் இந்த உயரத்துக்கு வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஆச்சரியப்பட்டவர்கள் எல்லாம் இப்போது சிவாவின் வளர்ச்சி நியாயமானதுதான் என்ற நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள். இருப்பினும் அவர் மீது பொறாமைப்படுபவர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற பேச்சும் பரவலாக ஓடிக்கொண்டிருக்கிறது.

அமரன் மெகா ஹிட்: அப்படி பொறாமைப்படுபவர்களை எல்லாம் மேற்கொண்டு எரிச்சலாக்கியது என்றால் அமரன் திரைப்படத்தின் மெகா ஹிட். ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படம் உலகளவில் 300 கோடி ரூபாய்வரை வசூல் செய்தது. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் சூப்பர் ரெஸ்பான்ஸை பெற்றது. அந்த வெற்றி சிவகார்த்திகேயனின் மார்க்கெட்டை உச்சத்தில் கொண்டு போய் நிறுத்தியிருக்கிறது.
சம்பளத்தை உயர்த்திய சிவா: அதன் காரணமாக அவர் தனது சம்பளத்தை உயர்த்தியிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 30 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்கிவந்த சிவகார்த்திகேயன், அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தனது சம்பளத்தை 50 கோடி ரூபாய்க்கும் மேல் உயர்த்திவிட்டதாகவும் தகவல் சொல்லப்படுகிறது. அதேசமயம் இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதும் தெரியவில்லை. ஆனால் அவர் சம்பளம் உயர்த்துவதற்கு தகுதியானவர்தான் என்பது எஸ்கே ரசிகர்களின் கருத்து.
பராசக்தி, மதராஸி: அமரன் படத்தின் மெகா ஹிட்டுக்கு பிறகு சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடிக்க கமிட்டானார். முதலில் இப்படத்தில் சூர்யாதான் நடிப்பதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அதிலிருந்து அவர் வெளியேற சிவா உள்ளே வந்தார். அவருடன் ரவி மோகன், அதர்வா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக இருக்கின்றன. இதற்கிடையே ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.

சௌந்தர்யா பேட்டி: இந்நிலையில் சிவகார்த்திகேயன் குறித்து பின்னணி பாடகி சௌந்தர்யா பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியிருக்கிறது. அவர் கொடுத்த ஒரு பேட்டியில், "சூப்பர் சிங்கரில் நான் கலந்துகொண்டபோது சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்தார். அந்த சமயத்தில் நான் காதலித்துக்கொண்டிருந்தேன். எனவே என்னுடைய காதலரிடம் ஃபோனில் அடிக்கடி பேசிக்கொண்டிருப்பேன். சிவாவுக்கும் நான் காதலிப்பது தெரியும். அப்போது பார்த்து என்னை அடுத்த சுற்றுக்கு பாட அழைப்பதற்காக சேனலிலிருந்து ஃபோன் செய்திருந்தார்கள்.
அய்யோ டேஞ்சர்: நான் எடுக்கவில்லை. பிறகு சேனலுக்கு சென்றபோது அனைவரையும் வைத்துக்கொண்டு சிவகார்த்திகேயன் என்னிடம், 'ஃபோன் செய்தால் எப்போதும் செகண்ட் லைனே போகுதே. அப்படி நீங்கள் யாரிடம்தான் பேசுவீர்கள்' என்று கேட்டுக்கொண்டே இருந்தார். அப்போதுதான் நான் உணர்ந்துகொண்டே, அய்யோ சிவாவிடம் ரகசியத்தை சொல்வதெல்லாம் செம டேஞ்சர் என்று. அவர் நம்மிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே நம்மிடமிருந்து கன்ட்டென்ட்டை எடுத்துவிடுவார்" என்றார். முன்னதாக சௌந்தர்யா சில பாடல்களை தமிழில் பாடியிருந்தாலும், தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் முத்த மழை பாடலை சின்மயி பாடியபோது அதில் கோரஸ் பாடகிகளில் ஒருவராக ஃபெர்ஃபார்ம் செய்தார். அப்போதிருந்து அவர் நெட்டிசன்களிடம் வெகு பிரபலமாகிவிட்டார்.


Click it and Unblock the Notifications











