சினிமாவும் கமலும்..கமலிசம் 65.. கைத்தட்டி பாராட்டிய தக் லைஃப் படக்குழு!
சென்னை: பிரபல நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வல்லுநராக 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தனது 6 வயதில் சினிமாவில் 'களத்தூர் கண்ணம்மா' படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திற்கே ஜனாதிபதியிடம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான உயரிய விருதை பெற்ற கமல்ஹாசன், அதன் பிறகு பல மொழி திரைப்படங்களில் நடித்தார். சினிமாவில் அவர் அறிமுகமாகி 65 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு தக் லைஃப் படக்குழுவினர் அவரை கொண்டாடி வருகின்றனர்.
திரைத்துறையில் பிரபல இயக்குநர் கே.பாலசந்தர் கமல்ஹாசனுக்கு குருவாகவும், வழிகாட்டியாகவும் திகழ்ந்தார். கே.பாலசந்தர் இயக்கத்தில் 1973இல் 'அரங்கேற்றம்' என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு கதாநாயகனாக பல மொழிகளில் நடித்தார். பாடகர், எழுத்தாளர், இயக்குநர், நடன இயக்குநர் என சினிமாவில் பலதுறைகளிலும் சகலகலா வல்லவனாக கமல், தன்னை படத்திற்கு படம் பட்டை தீட்டி கொண்டார்.

கமல்ஹாசன்: பாலசந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1981ம் ஆண்டு வெளியான 'ஏக் துஜே கே லியே' பெரிய அளவில் பேசப்பட்டது. அந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு அக்காலத்தில் கமலின் பெருமை தமிழில் மட்டுமல்லாது பாலிவுட், டோலிவுட் என உலக சினிமாவை வரை பேசப்பட்டது. கமல்ஹாசன் நடிப்பு மட்டுமல்லாது, இன்று பயன்படுத்தப்படும் பல்வேறு தொழில்நுட்பங்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளார். இன்று திரையரங்குகளில் laser 4k sound, Imax என பல தொழில்நுட்பங்கள் வந்தாலும் இதற்கெல்லாம விதை போட்டது கமல்ஹாசன் தான்.
வாழ்த்திய படக்குழு: களத்தூர் கண்ணம்மா படம் தொடங்கி இதுவரை 233 படத்தில் நடித்து சினிமாவில் தன்னிகர் கலைஞராக இருக்கும் கமலஹாசனை தக் லைஃப் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் கை தட்டி வரவேற்று, சினிமாவில் அவரின் 65வது ஆண்டுக்கான வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இதன் வீடியோக்கள் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலரும் கமலுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











