Thug Life Box Office - மூன்றாவது நாளிலும் செல்ஃப் எடுக்காத கமலின் தக் லைஃப்..எவ்வளவு வசூல் தெரியுமா?

சென்னை: மணிரத்னம் இயக்கி கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் கடந்த ஐந்தாம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாக பெரிய அடியை வாங்கியிருக்கும் அப்படம் வசூல் ரீதியாக சொல்ல முடியாத துயரத்தில் சிக்கியிருக்கிறது. முதல் இரண்டு நாட்களில் பெரிய வசூல் இல்லை. வார விடுமுறை நாளான நேற்றாவது சொல்லிக்கொள்ளும்படியான வசூல் வரும் என்று எதிர்பார்த்தால் நேற்றும் கலெக்‌ஷன் ஒன்றும் பெரிதாக இல்லை.

இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர் மணிரத்னம். அவர் இரண்டாவது முறையாக கமல்ஹாசனுடன் இணைந்த படம் தக் லைஃப். இதில் கமலுடன் சிம்பு, திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், நாசர், அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். மீண்டும் கமலும் மணிரத்னமும் இணைந்திருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பை இந்தப் படத்தின் மீது ரசிகர்களும், திரைத்துறையினரும் வைத்திருந்தார்கள்.

மோசமான விமர்சனங்கள்: படத்தை பார்த்த ரசிகர்கள் தக் லைஃப் படத்தை வைத்து செய்துவிட்டார்கள். கதையில் புதிதாக எதுவுமே இல்லை; அரத பழசான கதையை பட்டி டிங்கரிங் செய்திருக்கிறார்கள் என்ற விமர்சனம் எழுந்தது. மேலும் இது கமல்ஹாசன் எழுதிய கதை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கதையை படமாக்க எப்படி மணிரத்னம் ஒத்துக்கொண்டார் என்று ஆச்சரியத்துடனும், அதிர்ச்சியுடனும் கேட்டார்கள்.

Thug Life Third Day Box Office Movie Collected Only 7 Crores at Yesterday
Photo Credit:

திரிஷா கேரக்டரும் மோசம்: அதேபோல் படத்தில் மோசமான விமர்சனத்தை சந்தித்த இன்னொரு விஷயம் என்றால் திரிஷா - கமல் - சிம்பு கேரக்டர்கள். திரிஷாவுக்காக இரண்டு பேரும் சண்டையிட்டுக்கொள்வதுதான் கதையின் மைய சரடு போன்று வந்துவிட்டது. இதனை பார்த்த ரசிகர்களோ ஒரு பெண்ணுக்கு அடித்துக்கொள்வதைத்தான் கல்ட் க்ளாசிக் சினிமாவாக வரும் என நம்பி தியேட்டருக்கு வந்தோமா என்று விமர்சனத்தை முன்வைத்து ட்ரோலும் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.

கமலுக்கு கஷ்டம்தான்: இதற்கு முன்னதாக ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்த இந்தியன் 2 படத்தையும் கடுமையாக ட்ரோல் செய்தார்கள். இப்போது தக் லைஃப் படத்துக்கும் அதே நிலைமைதான் இருக்கிறது. கிட்டத்தட்ட தனது கரியரின் அந்திம காலத்தில் கமல்ஹாசன் இருக்கிறார். இப்படிப்பட்ட நேரத்தில் இந்த மாதிரியான ட்ரோல்களை அவர் சந்திப்பதெல்லாம் அவருக்கு தேவையா? என அவரது ரசிகர்கள் வருத்தத்துடன் பதிவும் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

வசூல் நிலவரம்: விமர்சன ரீதியாக படம் அடி வாங்கினாலும் கண்டிப்பாக வசூல் ரீதியாக சக்கைப்போடு போடும் என்று படக்குழு எதிர்பார்த்தது. ஆனால் அதிலும் பெரிய ரெஸ்பான்ஸ் இல்லை. Sacnilk வெளியிட்ட தகவல்படி, முதல் நாளில் தமிழில் 13.35 கோடி, ஹிந்தியில் 0.65 கோடி, தெலுங்கில் 1.5 கோடி ரூபாய் வசூலித்து இந்தியாவில் மொத்தமாக 15.5 கோடி ரூபாயைத்தான் படமானது வசூலித்தது. முதல் நாளே இப்படி அடி வாங்கியதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

தக் லைஃப் க்ளோஸ்: அதேபோல் இரண்டாவது நாளிலும் இந்தியாவில் மொத்தம் 7.15 கோடி ரூபாயைத்தான் படம் வசூலித்ததாக கூறிய அந்த இணையதளம் தற்போது படத்தின் மூன்றாவது நாள் வசூல் குறித்து தகவல் வெளியிட்டிருக்கிறது. அதன்படி 7.50 கோடி ரூபாயை அந்தப் படம் நேற்று வசூலித்ததாம். மேலும் மொத்தமாக இதுவரை 30 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும் அந்த வலைதளம் தெரிவித்திருக்கிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் போகிற போக்கை பார்த்தால் 50 கோடி ரூபாய் வசூலைக்கூட படம் தொடாதோ என்று கவலையுடன் கேட்க ஆரம்பித்துள்ளனர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X