Thug Life: திடீரென வேகமெடுக்கும் கமலின் தக் லைஃப்... அதிரடியாக இணைந்த ‘விருமாண்டி’ பட பிரபலங்கள்!

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டார். இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றே முதலில் சொல்லப்பட்டது. இந்நிலையில், திடீரென தக் லைஃப் படப்பிடிப்பை தொடங்க கமல் ஓக்கே சொல்லிவிட்டாராம். இதில் மேலும் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தக் லைஃப் படத்தில் இணைந்த பிரபலங்கள்
நாயகன் படத்துக்குப் பின்னர் மீண்டும் இணைந்துள்ளது கமல் - மணிரத்னம் காம்போ. பொன்னியின் செல்வன் ரிலீஸுக்கு முன்பே கமலின் 234வது படத்தின் இயக்குநராக கமிட்டானார் மணிரத்னம். அதேநேரம் கமல்ஹாசனும் இந்தியன் 2, கல்கி படங்களில் பிஸியாக நடித்து வந்தார். இதில் இந்தியன் 2 படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. அதேநேரம் இந்தியன் 3 படப்பிடிப்பிற்காக சில நாட்கள் மட்டும் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் கமல்.

 Thug Life: Thug Life First schedule begins in Chennai on Jan 18th... Nasser and Abirami On board

இன்னொரு பக்கம் கல்கி படத்தின் ஷூட்டிங்கும் விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாம். இதனிடையே கமல் பிறந்தநாளில் KH 234 படத்தின் டைட்டில் தக் லைஃப் என அறிவிக்கப்பட்டது. அதனுடன் மிரட்டலான டீசரும் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. மணிரத்னம் - கமல் காம்போவில் பக்கா கேங்ஸ்டர் மூவியாக தக் லைஃப் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட், ராஜ்கமல் ஃபிலிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்கின்றன.

அதேபோல், கமல்ஹாசனுடன் துல்கர் சல்மான், த்ரிஷா, ஜெயம் ரவி, கெளதம் கார்த்திக் ஆகியோர் நடிப்பதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. இன்னொரு பக்கம் இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் இசையில் மிரட்ட காத்திருக்கிறார். இந்நிலையில் தக் லைஃப் படத்தில் மேலும் இரண்டு பிரபலங்கள் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருவருமே கமலின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி, கமலின் நீண்ட கால நெருங்கிய நண்பர் நாசர் தக் லைஃப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளாராம். கமல், நாசர் இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். இக்கூட்டணி மீண்டும் பல வருடங்களுக்குப் பின்னர் இணைகிறது. அதேபோல், விருமாண்டி பட புகழ் அபிராமியும் தக் லைஃப் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளாராம்.

இதனால், தக் லைஃப் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக் கொண்டே இருக்கிறது. இதனிடையே தக் லைஃப் ஷூட்டிங் ஜனவரி இறுதியில் தொடங்கும் என தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது அதற்கும் முன்னதாக படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி பொங்கல் விடுமுறை முடிந்ததும் வரும் 18ம் தேதியே தக் லைஃப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.

சென்னையில் உள்ள பிரபலமான கல்லூரியில் தக் லைஃப் முதல்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தொடர்ச்சியாக தக் லைஃப் படப்பிடிப்பு நடைபெறும் என சொல்லப்படுகிறது. 18ம் தேதி தொடங்கும் தக் லைஃப் படப்பிடிப்பில் கமல்ஹாசனும் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இந்தப் படம் 2024ம் ஆண்டு இறுதிக்குள்ளாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியன் 2, இந்தியன் 3 படங்களும் இந்தாண்டே வெளியாகவுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X