Thug Life: 2வது நாளே பச்சை நிறமா இருக்கே.. தக் லைஃப் படத்துக்கு வந்த தலைவலி.. சரியும் டிக்கெட் புக்கிங்!
சென்னை: கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன், நாசர், அபிராமி என நடிகர்கள் பட்டாளமே இருந்தாலும் தக் லைஃப் படத்தை யாராலும் காப்பாற்ற முடியவில்லை என்றே பொதுமக்கள் மற்றும் விமர்சகர்கள் படத்துக்கு எதிரான நெகட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். முதல் நாளே அடித்து பிடித்து டிக்கெட் புக் செய்த பலரும் மாலை மற்றும் இரவு நேர காட்சிகளுக்கு செல்ல வேண்டாம் என டிக்கெட்டுகளை கேன்சல் செய்ததன் விளைவு தான் இந்தியா முழுவதும் முதல் நாள் வசூலிலேயே மிகப்பெரிய அடியை தக் லைஃப் திரைப்படம் சந்திக்க காரணம் என்கின்றனர்.
இந்தியாவின் பெருமைமிகு படைப்பாக தக் லைஃப் திரைப்படம் இருக்கும் என்றும் நாயகன் படத்தையே மறந்துடுவீங்க என்றும் போகிற இடத்தில் எல்லாம், சிம்பு வேற "இனிமே இங்க நான் தான் ரங்கராய சக்திவேல்" என கத்தி கூச்சலிட்டது எல்லாம் ரசிகர்களை படத்தை பார்த்த பின்னர் யோசித்து யோசித்து தலைவலியை உண்டு பண்ண வைத்து விட்டது என்கின்றனர்.

இதில், 8 வாரம் கழித்து தான் இந்த படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வேறு வெளியாகும் என கமல்ஹாசன் பக்காவாக பிளான் போட்டதையும் அறிந்துக் கொண்ட ரசிகர்கள் பொறுமையாகவே பார்த்துக் கொள்ளலாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாக கூறுகின்றனர். இந்நிலையில், 2வது நாளான இன்று டிக்கெட் புக்கிங் பல திரையரங்குகளில் காத்து வாங்கத் தொடங்கி விட்டது.
பச்சை நிறமே பச்சை நிறமே: அலைபாயுதே படத்தில் மணிரத்னத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான் போட்ட "பச்சை நிறமே" பாடலை மணிரத்னத்தின் தக் லைஃப் படத்துக்கும் பயன்படுத்தும் நிலைமை வந்துவிட்டது. "அஞ்சு வண்ண பூவே" என "உசுரே நீதானே" பாடல் போல ஒரு சூப்பரான பாடலை ஏ.ஆர். ரஹ்மான் கொடுத்தும், அதற்கு நீதி செய்யும் அளவுக்கு திரைக்கதையையும் எமோஷன் காட்சிகளையும் மணிரத்னம் உருவாக்கவில்லை என்பது தான் ரசிகர்களை ரொம்பவே அப்செட் ஆக்கிவிட்டது. மேலும், முத்தமழை பாடலை எல்லாம் அப்படி ரசிகர்கள் ரசித்துக் கொண்டிருந்த நிலையில், தியேட்டரில் அந்த பாடலையே மணிரத்னம் நீக்கிவிட்டார். எந்த பாடலையும் முழுமையாக ரசிக்கவிடவில்லை என்பதும் பெரிய குறையாக மாறியுள்ளது.

உலகளவில் முதல் நாள் வசூல்: இந்தியா முழுவதும் தக் லைஃப் திரைப்படம் முதல் நாளில் அதிகபட்சமாக 17 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக Sacknilk இணையதளம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், உலகளவில் 40 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியிருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டுமே 20 கோடிக்கும் அதிகமான வசூலை தக் லைஃப் திரைப்படம் ஈட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த வசூல் ரொம்பவே குறைவு.
2வது நாளிலும் பலத்த அடி: படத்துக்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்கள் பெருகிய நிலையில், பொதுமக்கள் இந்த படத்தை பார்க்க ஆர்வம் காட்டவில்லை. அதன் காரணமாக வெள்ளிக்கிழமையே பல திரையரங்குகளில் டிக்கெட் புக்கிங் ரொம்பவே சுமாராகவே உள்ளன. சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை டிக்கெட் புக்கிங் சூடு பிடித்தால் மட்டுமே கமல்ஹாசனுக்கு இந்த படம் கொஞ்சமாவது சம்பாதித்து தரும் என்கின்றனர். இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து இந்த படமும் ஃபிளாப் பட வரிசையில் இணைந்துவிடும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











