Thug Life Troll: மணிரத்னம் மேல கோபம் வருது.. கர்நாடகா தப்பிச்சுட்டாங்க.. முதல் நாளே கதறும் ரசிகர்கள்!
சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் இன்று அதாவது ஜூன் மாதம் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், நாசர், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, வையாபுரி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசுகையில் கன்னட மொழி தமிழில் இருந்து பிறந்தது என்று கூறினார். இது சர்ச்சையாக மாறி நீதிமன்றம் வரை சென்று, கமல்ஹாசனை மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். கமல்ஹாசன் முடியாது என்று கூறியதால் படம் கர்நாடகாவில் வெளியாகவில்லை.
கர்நாடகாவைத் தவிர மற்ற பகுதிகளில் படம் வெளியானது. படம் பார்த்த ரசிகர்கள் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை எனவும், படம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் இருப்பதாகவும் தெரிவித்து வருகிறார்கள். ரசிகை ஒருவர் கூறும்போது, " இந்த படத்தை மிகவும் எதிர்பார்ப்புடன் பார்க்க வந்தோம். ஆனால் படத்தில் திரைக்கதை என்பது இல்லை. பேசி பேசியே சாகடித்து விட்டார்கள். கூடுதலாக சண்டைக்காட்சிகள் கொடுத்திருக்கலாம். நாங்கள் எல்லாம் தியேட்டரில் தூங்கிவிட்டோம். நல்ல வேளை கர்நாடகா மக்கள் தப்பித்தார்கள். சிம்பு, கமல் ஹாசன் நடிப்பைத் தவிர படத்தில் எதுவும் இல்லை. ரொம்ப ரொம்ப மொக்கையாக இருந்தது. மாத்தி மாத்தி சுட்டு சாகடித்து கொண்டு உள்ளார்கள். எமோஷனலாக எதுவும் கனெக்ட் ஆகவில்லை. கமல் மற்றும் சிம்பு ரசிகர்கள் வேண்டுமானால் வாங்க" என்று தெரிவித்துள்ளார்.

மணிரத்னம் மேல் கோபம்: அதேபோல் இன்னொரு ரசிகை, " என்ன வருத்தம் என்றால், மணிரத்னம் மேல் வருத்தமும் கோபமும் வருகிறது. சிம்புவை இப்படி செய்துவிட்டாரே என்று கோபம் வருகிறது. படம் முழுக்க அதிகமாக டயலாக்குகள் உள்ளது, இன்னும் கொஞ்சம் சண்டைக் காட்சிகள் கொடுத்திருக்கலாம். இந்த படத்தை நாய்கன் படத்தின் இரண்டாம் பாகம் என்று கூறலாம். சிம்புவைப் பார்த்தது மட்டும் தான் சந்தோஷம்" என்று கூறியுள்ளார்.
இந்தியன் 2 பெட்டர்: இது இல்லாமல் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் படத்தை கடுமையாக ட்ரோல் செய்து வருகிறார்கள். அதாவது ரசிகர் ஒருவர், " இந்த படத்தை வாங்கி ரிலீஸ் செய்யாத கர்நாடகா திரைப்பட உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். இந்த படத்தோடு ஒப்பிடும்போது இந்தியன் 2 படம் எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

மீம்கள்: அதேபோல் மேலும் சில இணையவாசிகள் தக் லைஃப் படம் இந்தியன் 2 படத்தை விட மோசமாக இருக்கிறது என மீம் டெம்ப்ளேட்கள், வீடியோ மீம்கள் என உள்ளிட்டவற்றை பகிர ஆரம்பித்துவிட்டார்கள். அதே நேரத்தில் ரஜினி ரசிகர்கள் என அடையாளப்படுத்திக் கொள்ளும் இணையவாசிகளும் தக் லைஃப் படத்தை ட்ரால் செய்து வருகிறார்கள். இது தொடர்பான பதிவுகள் தற்போது இணையத்தை ஆக்கிரமிப்பு செய்து வருகிறது. இந்தியன் 2 என்ற ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது. இது படக்குழு மத்தியில் அதிர்ச்சியை எழுப்பியுள்ளது. மேலும் இவை இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











