Thug Life vs Indian 2 vs Vikram: சொந்த காசுல சூனியம் வைத்துக் கொண்டாரா கமல்.. அமரனால் வந்ததும் நொந்ததும்!
சென்னை: தமிழ் சினிமா உலகில் அனைத்து அவதாரங்களையும் எடுத்தவர் கமல்ஹாசன். இவரது தயாரிப்பில் தற்போது வெளியாகியுள்ள படமான தக் லைஃப் படத்தில் அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் இருந்தது. அப்படி இருக்கும்போது படத்தின் முதல் நாள் வசூல் மற்றும் படத்தின் விமர்சனம் படக்குழுவினருக்கு எதிர்பார்த்த அளவுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வில்லை. இந்நிலையில் தக் லைஃப், இந்தியன் 2 மற்றும் விக்ரம் என கமல்ஹாசன் நடிப்பில் வெளியான கடைசி மூன்று படங்கள் வசூல் குறித்தும், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவான விக்ரம், அமரன் மற்றும் தக் லைஃப் ஆகிய படங்களின் வசூல் குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்.
தக் லைஃப் படத்தின் முதல் நாள் வசூல் ரூபாய் 17 கோடிகள் என சாக்நிக் வலைதளம் கூறுகிறது. இந்த வசூல் கணக்கு என்பது முதல் நாளில் இந்தியா முழுவதுமான வசூல் கணக்கின் தோராய மதிப்பு தான். இதில் இருந்து சற்று மாறுதல் இருக்கும். இப்படி இருக்கும்போது அதற்கு முன்னர் ரிலீஸ் ஆன இந்தியன் 2 படம். ஷங்கர் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் வெளியான இந்த படம் வணிக ரீதியாக மிகப்பெரிய தோல்விப்படம். விமர்சன ரீதியாக பல லாஜிக் எரர்களை இணையவாசிகள் கிழித்து தொங்க விட்டனர். ஆனால் இந்த படம் முதல் நாளில் ரூபாய் 25.6 கோடிகள் வசூல் செய்ததாக கூறப்படுகிறது. முதல் நாளுக்குப் பின்னர் இந்தியன் 2 வசூல் குவிக்கவே இல்லை.

வெற்றி - தோல்வி: கமல் நடித்து கடைசியாக பிரமாண்டமான வெற்றியைப் பெற்ற படம் என்றால் அது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படம் மட்டும்தான். இந்த படத்தை கமல்ஹாசன் ரெட் ஜெயிண்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்திருந்தார். விக்ரம் படம் கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரிய வசூலைக் குவித்த படம். படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. ஆனால் தற்போது தக் லைஃப் படம் மிகவும் ஆவரேஜான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
ராஜ்கமல்: கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான கடைசி மூன்று படங்களான விக்ரம், அமரன் மற்றும் தக் லைஃப் ஆகிய மூன்று படங்களிலும் இருக்கும் ஒற்றுமைகள் என்று எடுத்துக் கொண்டால், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷ்னல்ஸ் மற்றும் மூன்று படத்திலும் இடம்பெற்றுள்ள அமர் - அமரன் எனும் பெயர்கள்தான். விக்ரம் படத்தில் ஃபகத் ஃபாசிலின் பெயர் அமர். சிவகார்த்திகேயன் நடித்து வெளியான கடைசி படத்தின் டைட்டிலே அமரன். தக் லைஃப் படத்தில் சிம்பு பெயர் அமரன்.

அமரனால் வந்ததும் நொந்ததும்: இந்த முன்று படங்களில் விக்ரம் மற்றும் அமரன் ஆகிய படங்கள் மட்டும் தான் கமல்ஹாசனுக்கு வணிக ரீதியாக வெற்றிப் படமாக மாறியது. விக்ரம் படம் ரூபாய் 500 கோடிகளுக்கு மேல் வசூலித்தது என கூறப்படுகிறது. அதேபோல் அமரன் படம் கிட்டத்தட்ட 370 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது என கூறப்படுகிறது. விக்ரம் படம் கொடுத்த வணிக ரீதியான வெற்றியால் தான் அமரன் மற்றும் தக் லைஃப் படத்தை தயாரிக்க முடிவு செய்தார். இதில் அமரன் படம் மிகப்பெரிய வணிக வெற்றியை ஈட்டிக் கொடுத்தது. ஆனால் தக் லைஃப் வணிக வெற்றியை ஈட்டிக் கொடுக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. அந்த இரண்டு அமரன்களால் சம்பாதித்த கமல் இந்த அமரன் மீது நம்பிக்கை வைத்து கொட்டியுள்ளார். வணிக வெற்றியா தோல்வியா என்பதை இந்த வாரத்தில் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தீர்மானித்துவிடும்.


Click it and Unblock the Notifications











