Thug Life X Review: தக் லைஃப் ட்விட்டர் விமர்சனம்.. மணிரத்னம் - கமல்ஹாசன் திரையில் மிரட்டினார்களா?

சென்னை: தக் லைஃப் திரைப்படம் வெளிநாடுகளிலும் மற்ற மாநிலங்களிலும் அதிகாலையிலேயே வெளியான நிலையில், சோஷியல் மீடியா முழுக்க அதன் விமர்சனங்கள் வரத் தொடங்கியுள்ளன. கர்நாடகாவில் தக் லைஃப் திரைப்படம் வெளியாகாத நிலையில், ஓசுருக்கு வந்து பார்க்க ரசிகர்கள் ரெடியாகி விட்டனர்.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் நாயகன் படத்துக்குப் பிறகு 38 ஆண்டுகள் கழித்து தக் லைஃப் திரைப்படம் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, அசோக் செல்வன், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Thug Life X Review in Tami Maniratnam and Kamal Haasan combo gets a mixed reviews in social media
Photo Credit:

ஏ.ஆர். ரஹ்மான் இசையில் ஏற்கனவே வெளியாகியுள்ள தக் லைஃப் படத்தின் சுகர் பேபி, ஜிங்குச்சா, விண்வெளி நாயகா, முத்த மழை உள்ளிட்ட பாடல்கள் அனைத்துமே சார்ட் பஸ்டர் ஹிட் அடித்துள்ளன. இந்நிலையில், மணிரத்னம் - கமல்ஹாசன் - ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் சிம்பு காம்போவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள தக் லைஃப் படம் அந்த எதிர்பார்ப்புகளை திரையரங்குகளில் பூர்த்தி செய்ததா? இல்லையா? என படம் பார்த்த ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டுள்ள விமர்சனத்தை இங்கே பார்க்கலாம்.

தக் லைஃப் ட்விட்டர் விமர்சனம்: "வாவ்.. வாவ்.. வாவ்.. வாவ்.. முதல் பாதி மற்றும் இடைவேளை காட்சிகள் அல்டிமேட்டாக உள்ளது. கமல்ஹாசனின் ராக் சாலிட் கம்பேக் இந்த தக் லைஃப்" என இந்த நெட்டிசன் தனது முதல் பாதி விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள தக் லைஃப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் குவிந்து வருகின்றன.

செக்கச் சிவந்த வானம் 2: அப்படியே செக்கச் சிவந்த வானம் படம் பார்த்தது போலத்தான் உள்ளது. தக் லைஃப் படம் நத்தை வேகத்தில் மெதுவாக நகர்கிறது. முதல் பாதி முழுக்க சீட்டில் அமர முடியவில்லை. கமல்ஹாசன் தனது முத்தக் காட்சிகளையும், கில்மா காட்சிகளையும் காட்டி படத்தைக் காப்பாற்றுகிறார். செக்கச் சிவந்த வானம் படத்தில் அரவிந்த் சாமி மற்றும் அதிதி ராவ் போர்ஷன் தான் கமல்ஹாசன் மற்றும் த்ரிஷா போர்ஷன் என இந்த நெட்டிசன் கழுவி ஊற்றியுள்ளார்.

சிம்பு தான் செம மாஸ்: அமர் கதாபாத்திரம் கண்டிப்பாக தக் லைஃப் படத்தை தாங்கி பிடிக்கும். இடைவேளை காட்சியில் கமல்ஹாசன் மற்றும் சிம்புவுக்கு இடையே நடக்கும் அந்த யுத்தம் கொல மாஸ். இனிமே இங்க நான் தான் ரங்கராய சக்திவேல் என சிம்பு சொல்லும் இடமெல்லாம் செம ஃபயர் என இந்த நெட்டிசன் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார்.

பைசா வசூல் படம்: "கல்ட் கிளாசிக் வித் பேங்கர் இன்டர்வெல், ஏற்கனவே பழக்கப்பட்ட கதை போலவே ஆரம்பித்தாலும், கொஞ்ச நேரத்தில் படம் பிக்கப் ஆகிவிடுகிறது. அதன் பின்னர், கமல்ஹாசனின் மிரட்டலான நடிப்பு மற்றும் சிம்பு கேங்ஸ்டராக நடித்துள்ள விதம் படத்துக்கு பெரிய பலமாக உள்ளது. கமல்ஹாசனுக்கு கண்டிப்பாக இந்த படம் மிகப்பெரிய பைசா வசூல் படமாக அமையும் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

ரொம்ப ஆவரேஜ்: விமர்சகர் வெங்கி, தனது எக்ஸ் தள பக்கத்தில், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா நடித்த தக் லைஃப் திரைப்படம் ரொம்பவே ஸ்லோவாக முதல் பாதி செல்வதாகவும், கணிக்கப்பட்ட கதையாகவே படம் நகர்வது பொறுமையை சோதிக்கிறது என பதிவிட்டுள்ளார்.

Thug Life X Review in Tami Maniratnam and Kamal Haasan combo gets a mixed reviews in social media

பிளாக்பஸ்டர்: தக் லைஃப் படத்துக்கு எதிராக ரஜினிகாந்த் ரசிகர்கள் நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பி வருவதாக கமல் ரசிகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். விஜய் ரசிகர்கள் மற்றும் கமல் ரசிகர்கள் படத்துக்கு பாசிட்டி விமர்சனங்களை அளித்து வருகின்றனர். இந்த ரசிகர் படம் பிளாக்பஸ்டர் என்றும் 5க்கு 4.75 ரேட்டிங் கொடுக்கலாம் என்றும் தரமான கிளைமேக்ஸ் என்றும் குறிப்பிட்டுள்ளார். கூடிய விரைவில், தக் லைஃப் படத்தின் முழு விமர்சனத்தை நமது சைட்டில் காணலாம்.

Thug Life X Review in Tami Maniratnam and Kamal Haasan combo gets a mixed reviews in social media

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X