துக்ளக் தர்பார் சுவாரஸ்யங்கள்: பட்டாசு பிடிக்காத விஜய் சேதுபதி - ஷாக்கான அதிதி ராவ்

By R VINOTH

சென்னை: துக்ளக் தர்பார் படத்தோட தொடக்க விழாவுல பேசுன நடிகர் விஜய் சேதுபதி, பட்டாசு வெடிக்கிறது எனக்கு சுத்தமா பிடிக்காது, ஏன் பட்டாச வெடிச்சி காச கரியாக்குறீங்கன்னு பேசியிருக்காரு.

மக்கள் செல்வன்னு பேர் எடுத்துருக்குற விஜய் சேதுபதி, நடிக்கிற துக்ளக் தர்பார்ங்கற படத்தோட பூஜை நேத்து நடந்தது. அதுல கலந்துக்கிட்ட அவருக்கு ரொம்ப விமரிசையா வரவேற்பு கொடுத்தாங்க.

Thuglak Darbar shooting pooja Vijay Sethupathi speech

அவரு வர்றப்ப அந்த ரோடையே பிளாக் பண்ணி தடபுடலா வரவேற்பு கொடுத்ததோடு பட்டாசெல்லாம் வெடிச்சி ச்சும்மா பட்டய கௌப்பிட்டாங்க. அவரு மேடைக்கு வந்த ஒடனே, மாலை மரியாதன்னு போட்டு எல்லாரும் வந்து கை குலுக்கி வாழ்த்தெல்லாம் தெரிவிச்சாங்க.

பின்னாடி அவரு பேசும்போது, என்ன சொன்னாருன்னா, நா இந்த ஃபங்ஷனுக்கு வரும்போது எனக்கு தடபுடல வரவேற்பெல்லாம் கொடுத்து அசத்திட்டீங்க. எனக்கு ரொம்ப சந்தோசமா இருந்திச்சி. இருந்தாலும், நா வந்தப்ப ரோடெல்லாம் பிளாக் பண்ணி பட்டாசு வெடிச்சீங்க.

அந்த பட்டாச வெடிச்சது தான் எம்மனசக்கு ரொம்ப கஷ்டமா இருந்திச்சி, ஏன் இப்பிடி பட்டாச வெடிச்சி காச கரியாக்குறீங்க. எனக்கு பிடிக்காத விஷயம் என்னன்னா, பப்ளிக்க டிஸ்டர்ப் பண்ணி இந்த பட்டாசு வெடிக்கிறது தான். அதுவும் இவ்வளவு பட்டாசு வெடிச்சிருக்குறீங்க.

இவ்வளவு நல்ல ஃபங்ஷன்ல யாரு இந்த ஐடியாவ கொடுத்தது, எனக்கு இது சுத்தமா பிடிக்கல, இனிமே இந்த மாதிரி பட்டாசெல்லாம் வெடிக்காதீங்கன்னு மனசொடிஞ்சி பேசிட்டாரு.

பின்னாடியே வந்த நம்ம பார்த்திபன் படத்த பத்தி பேசும் போது, இந்தப் படத்தோட பேர்லயே லக்கும் இருக்கு, கிக்கும் இருக்கு, அதனால இந்த ரெண்டும் சேர்ந்து இருக்குறதுனால, இந்தப் படம் நிச்சயமா ஹிட்டாகும்னு ரொம்ப டச்சிங்கா பேசுனாரு.

96 படத்தோட டைரக்டர் பிரேம் குமார் தான் துக்ளக் தர்பார் படத்துக்கு கேமரா மேனா ஒர்க் பண்ணப்போறாரு. இந்தப் படத்தை டைரக்ட் பண்ணப்போறவரு யாருன்னா, அவரு பேரு டெல்லி பிரசாத். வசனம் எழுதப்போறது பாலாஜி தரணிதரன். இந்தப் படத்தோட தயாரிப்பாளர் யார்ன லலித் பிரசாத்னு பேரு. விஜய் சேதுபதிக்கு ஜோடியா அதிதி ராவ் நடிக்கிறாங்க.

விஜய் சேதுபதி கூட நடிக்கிறது பத்தி அதிதி ராவ் பேசும்போது, அவரு கூட நா நடிக்கிறது என்னோட பாக்கியம். அவரு நடிச்ச செக்கச் செவந்த வானம் பார்த்தேன். அதுல அவரோட ஒவ்வொரு மூவ்மென்ட்டையும் பாத்து நா அப்பிடியே ஸாக்காயிட்டேன்னு சொல்லி இருக்குறாரு. அவரு கூட எப்படா நடிக்கப்போறோமோன்னு நா காத்துக்கிட்டு இருந்தேன்னு அப்பிடின்னு அதிதி ராவ் சொல்லியிருக்காங்க.

இந்தப் படத்தோட பூஜெ ஃபங்ஷன்ல இன்னொரு முக்கியமான விஷயம் என்னன்ன, பொதுவா, ஒரு படத்தோட ஸ்கிரிப்ட் புக்க வச்சி பூஜ தான் பண்ணுவாங்க. ஆனா இந்தப்படத்தோட ஸ்க்ரிப்ட் புக்குலு தயாரிப்பாளர்ல இருந்து ஹீரோ, ஹீரோயின், டைரக்டர் என எல்லாருமே கையெழுத்து போட்டு இருக்காங்க.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X