ஒன் ரூல் நோ லிமிட்ஸ்.. CSK-விற்கு மாஸ் வீடியோ வெளியிட்ட தக்ஃலைப்.. ரெடியா இருங்க மக்கா!
சென்னை: கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. படத்தின் பணிகள் முடிவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே, படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் ஏப்ரல் மாதத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தக் லைஃப் படக்குழு சிஎஸ்கே தல தோனியுடன் சிங்கம் கர்ஜிக்கும் வீடியோவை வெளியிட்ட அதகளம் செய்துள்ளனர். கண்டிப்பா சம்பவம் பெரிதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
36 ஆண்டுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் தக் லைஃப் படத்தில் இணைந்திருக்கிறார். படம் குறித்த அறிவிப்பு வெளியானபோதே சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்ட நினைக்கும் கமல்ஹாசனும், கதையின் பிம்பம் பெரிதாக இருந்தாலும் தலைக்கணம் இல்லாமல் ரசிகர்களை கவரும் மணிரத்னமும் இணைந்தால் எப்படி இருக்கும். அதே நாயக்கர் களமிறங்கியிருக்கிறார். கொஞ்சம் கூட சோர்வடையலை என்றே திரை விமர்சகர்களும் தெரிவித்தனர்.

சமீபத்தில் கமல் ஒரு பேட்டியில் மிக சாதாரணமாக தெரிவித்துவிட்டார். நானும் மணியும் இணைந்தாலே எதிர்பார்ப்புதான். அதனால் இப்போது இணைந்திருக்கிருக்கிறோம். ரசிகர்களும் அந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். பசியோடு இருக்கும் ரசிகர்களுக்கு தீணி போட தயாராகிவிட்டோம் என சொல்லும் போதே கூஸ்பம்ப்ஸ் ஆக இருந்தது. படத்திலு்ம தடம் மாறாத சம்பவம் ரெடியாக இருக்கிறது என்பது அப்போதே உறுதியானது.
ஏ.ஆர்.ரஹ்மான்: தக் லைஃப் படத்திற்கு ரஹ்மான் இசையமைப்பது கூடுதல் பலமாக இருக்கிறது. சமீபத்தில் வெளியான படத்தின் க்ளிம்ஸ் வீடியோவில் இடம்பெற்ற விண்வெளி நாயகா என்கிற வார்த்தையை மையப்படுத்தி முதல் சிங்கிள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பந்தலுக்கு ஈசான மூலை என்கிற வரிகளை கமலஹாசன் பாடும் பாடல் உருவாகியுள்ளது உறுதியாகிவிட்டது. இந்த பாடலின் புரோமோவை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மான் ராயன் படத்தில் பின்னணி இசையிலும், உசுரே பாடலிலும் ரசிகர்களை உலுக்கி எடுத்திவிட்டார். அதே பயரோ தக் லைஃபிலும் இருக்கும் என்ற ஆவலும் அதிகரித்துள்ளது.

பலவித கெட்டப்: தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு சென்னை கோவா உள்ளிட்ட இடங்களில் நடந்து முடிந்திருக்கிறது. மேலும், சிம்பு கமலுடன் இணைந்து அதகளம் செய்துள்ளாராம். கமலை போன்று பல்வேறு கெட்டப்புகளில் வருவதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து வெளியாகும் அவரது லுக்கும் ரசிகர்களை பிரம்மிக்க வைத்துள்ளதாம். அவர் நடிக்கும் 49வது படத்திற்கு இப்படம் மிகப்பெரிய பிளஸ் ஆக இருக்குமாம். இன்னும் என்ன அப்டேட் இருக்கோ அத்தனையும் சொல்லிடுங்க சர்ப்ரைஸ் தாங்க முடியவில்லை கமல், சிம்பு ரசிகர்களும் தலையை பிய்த்து கொள்கின்றனராம்,.
குத்துப்பாட்டு: விஜய் நடித்த கோட் படத்தில் இடம்பெற்ற மட்ட படலையும் தாண்டி ஒரு குத்துப்பாட்டு தக் லைஃப் படத்தில் இருக்கிறதாம். இந்த பாடலுக்கு த்ரிஷாவும் சிம்புவும் சேர்ந்தும் குத்தாட்டம் போட்டுள்ளதாகவும், அதில் மஞ்சள் சாரி, இதில் எந்த கலர் சாரி என்று சொல்ல முடியாது வெரி சாரி என படக்குழு தவிர்த்துவிட்டதாம். இந்த பாட்டு சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளனராம். அப்போ ஆண்டவர் கமல் தக் லைஃப் படத்தில் தரமான சம்பவம் செய்ய இருக்கிறாராம்.

நடிகர்கள்: தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து ஜூன் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்ய தயாராக இருக்கிறது. ஏப்ரல் மாதத்தில் இருந்து படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கமலுடன் சிலம்பரசன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி, ஜோஜூ ஜார்ஜ், சேத்தன், அலி ஃபைசல், வடிவுக்கரசி, சானியா மல்ஹோத்ரா எனப் பலரும் நடிக்கின்றனர். மிர்ஷாபூர் வெப் தொடர் மூலம் புகழை பெற்ற நடிகர்களும் இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.
சிஎஸ்கே ஆட்டம் இன்று: ஐபிஎல் சீசன் 18 நேற்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரம எதிரியான மும்பை அணியை எதிர்கொள்கிறது. சிஎஸ்கே அணி விளையாடும் முதல் போட்டியே சென்னையில் தொடங்குவதால் பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தல தோனி சிக்சர் அடிக்கிறாரோ இல்லையோ அவர் வந்தா மட்டும் போதும் என்பதற்காக ரசிகர்கள் சிலர் டிக்கெட் வாங்கி சென்று அவர் தரிசனத்தை கண்டு களிக்கின்றனர். அந்தளவிற்கு அவர் மீது அன்பை வைத்துள்ளனர். தமிழக வீரர் அஸ்வினும் மீண்டும் இணைந்துள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சிஎஸ்கே சிங்கம்: சென்னை அணிக்கு ஒரே சிங்கம் ஒரே தலைவர் என்பது அனைவரும் அறிந்ததே. சின்ன தல என்றால் அது ரெய்னா தான். ஆனால், ருத்ராஜ் கெய்க்வாட் தலயின் குட்டி சிங்கம் என்றே ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். அந்த வகையில் கமல் நடித்திருக்கும் தக் லைஃப் படக்குழுவும் சிஎஸ்கே அணியும் ஒன்று சேர்ந்தால் எப்படி இருக்கும். இன்று சென்னை அணி ஆடும் முதல் ஆட்டத்திற்காக தக் லைஃப் படக்குழு தல தோனி மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் புரோமோ வீடியோவை வெளியிட்டு ஐபிஎல் செலிபிரேஷனை தொடங்கியிருக்கிறது.
ஒரே சிங்கம்: அந்த வீடியோவில் ஒரே சிங்கம், ஒரே ரூல்ஸ்தான் என்பது போன்று வார்த்தைகளும் அதில், கமலுக்கு இணையாக தோனியும், குட்டி சிங்கமாக சிம்புவும் ருத்ராஜ் கெய்க்வாட்டும் இருக்கும் புரோமோ வீடியோ வெளியானது. இதில், சிங்கங்கள் வேட்டைக்கு தயாராக இருப்பது போன்ற போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இன்று இரவு தொடங்கும் போட்டியில் தக் லைஃப் படக்குழுவினரும் கலந்துகொண்டு சென்னை ரசிகர்களை குஷிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
சினிமாவிற்கு கமல் சிங்கம் என்றால் கிரிக்கெட்டிற்கு ஒரே ராஜா, சிங்கம் எல்லாம் தல தோனிதான். சினிமாவின் லெஜண்டும், கிரிக்கெட் ஜாம்பவான்களும் இணைந்து நடத்தும் முதல் போருக்கு ஆயத்தமாக இருக்கிறார்கள் ரசிகர்கள். வெற்றியை கொண்டாட காத்திருக்கின்றனர். தோல்வியை சந்தித்தாலும் சிங்கம் சிங்கம் தான் என்பதை உணர்த்தும் வகையில் புரோமோ வீடியோ இருக்கிறது. ஒரு வேளை கமல் பாடியுள்ள ஈசாணி மூலை பாடலை நேரடி லைவ்வாக வெளியிட திட்டமிட்டுள்ளனரா என்ற எக்ஸைட்மண்டும் எகிற வைக்கிறது. ஒரே நேரத்தில் ரசிகர்கள் இரண்டு ஆட்டங்களை பார்க்க போகின்றனர். எது வென்றாலும் சிங்கம் தான் கெத்து. தக் லைஃப் - சிஎஸ்கேவும் இணைந்தால் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். இறங்கி அடித்தால் சிக்சர் மட்டும் தக் லைஃப் கொடுக்கவும் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











